சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் மாற்றம்?

சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் மாற்றம்?
No more IPL matches in Chennai because of Cauvery protests

புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை - கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி கடும் போராட்டங்களுக்கு இடையே நடைபெற்றது.

நேற்று தமிழ் அமைப்புகள், அரசியல் கட்சிகள், சினிமாதுறையை சேர்ந்தவர்கள் என சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போராட்டங்கள் நடந்தன. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போலீஸ் தடியடி நடத்தினர்.

இதனை அடுத்து, சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த மீதமுள்ள 6 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் ஐ.பி.எல் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் அல்லது புனே ஆகிய மைதானங்கள் பரிசீலனையில் இருந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

No more IPL matches in Chennai because of Cauvery protests