விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டமில்லை

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டமில்லை
No idea on drought relief fund on farmers

புது டெல்லி: தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில், கடந்த மாதம் 14-ம் தேதி முதல் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்திற்கான வறட்சி நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்நிலையில், விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது அகில இந்திய வானொலியின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியினால் தமிழக விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No idea on drought relief fund on farmers