இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்திலும் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் பே ஓவல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் எடுத்தது. கேஎல் ராகுல் சதம் அடித்து 112 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. 

இதையடுத்து, நியூஸிலாந்துக்கு பெரிய பாட்னர்ஷிப் அமையவில்லை. சீரான இடைவெளியில் ராஸ் டெய்லர் (12), நிகோல்ஸ் (80) மற்றும் ஜம்மி நீஷம் (19) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம், 48-வது ஓவரின் முதல் பந்திலேயே நியூஸிலாந்து அணி வெற்றி இலக்கை அடைந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டாம் லாதம் 34 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். கிராணட்ஹோம் 28 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 58 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்திலும் 300  ரன்கள் எடுத்து  வெற்றி  பெற்றதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை நியூஸிலாந்து அணி 3-0 என முழுமையாக வென்று அசத்தியுள்ளது. 

31 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி முழுமையாக இழப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.