“பீனிக்ஸ் மனிதர்கள்”

“பீனிக்ஸ் மனிதர்கள்”

பல்வேறு துறைகளில் சாதிக்கும் மனிதர்களை கௌரப்படுத்தும் விதமாக  நியூஸ்7 தமிழ்  தொலைக்காட்சியில்  “பீனிக்ஸ் மனிதர்கள்” நிகழ்ச்சி ஞாயிறு தோறும்  மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது .

 ஒரு இலக்கை அடைவது அல்லது ஒரு துறையில் சாதனை புரிவது என்பது மிகக் கடினமான ஒன்று.  ஏனெனில் குடும்பம், சமூகம் என பல காரணிகள் அவர்களுக்கு தடையாக இருக்கிறது அதையும் மீறி வெற்றியை நோக்கிய பயணம் தான் ”ஃபினிக்ஸ் மனிதர்கள்" நிகழ்ச்சி”.. 

வெவ்வேறு துறைகளின் சாதித்து கொண்டிருக்கும் ஆண்கள் , பெண்கள் மற்றும் திருநங்கைகள் அடையாளம் கண்டு தனக்கான திறமையை வெளிக்கொணற திறமையாளனுக்கு சரியான ஒரு இடம் கொடுக்கும் ஒரு முயற்சியே இந்த நிகழ்ச்சி.

சுவாரசியமான பலரை அடையாளம் கண்டு மக்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி . இந்நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்குபவர் பனிமலர்.