60 @ 6

60 @ 6

காலை முதல் மாலை வரை நடந்த ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் அரை மணி நேரத்தில் சுருக்கமாகவும் , விரைவாகவும் ஆறுமணிக்கு 60  செய்திகளாகத் தொகுத்து தருகிறது நியூஸ் 7 தமிழ் சேனலின்”  60 @ 6   நிகழ்ச்சி .

மாநில அளவில் நடந்த பத்து முக்கியமான செய்திகளில் இருந்து துவங்கும் நிகழ்ச்சி அடுத்தடுத்து மாவட்டம், தேசம், உலகம், அரசியல் ,சினிமா என அனைத்து துறைகளிலும் அன்றை தினத்தில் நடந்த  முக்கிய நிகழ்வுகளை பாரபட்சம் இன்றி முன்வைக்கிறது.  அரை மணி நேரத்தில் 60 செய்திகளைத் தருவது  சவாலான விஷயம் என்ற போதும் செய்திகளை முழுமையாகவும் தரமாகவும் எந்த சமரசமின்றியும் தருவது இந்நிகழ்ச்சியின் தனிச் சிறப்பு.

திங்கள் முதல் சனி வரை மாலை 6:00 மணிக்கு நியூஸ் 7 தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும்  60 @ 6   நிகழ்ச்சியை திவ்யா மற்றும் லலிதா தொகுத்து வழங்குகிறார் .