“டாக்டரிடம் கேளுங்கள்”

“டாக்டரிடம் கேளுங்கள்”
News 7 Tamil program Doctaridam Kelungal

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிறு காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகும் “டாக்டரிடம் கேளுங்கள் “ நிகழ்ச்சியில் நேயர்களுக்கு மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் அளிக்கப்படுகின்றன.

உடல்நலம் குறித்து, தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்கள், அவற்றிற்கான சிகிச்சை முறைகள் மற்றும் சிகிச்சையளிப்பதற்கான புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் தெளிவாக விளக்கப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் தேர்ந்த மருத்துவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மருத்துவரைத் தொடர்புகொள்ளும் நேயர்கள் மிகவும் நுணுக்கமான, சின்னச் சின்னக் கேள்விகளையும் கேட்கின்றனர். இதயநோய் உள்ளிட்ட, நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, நீரிழிவு போன்றவை மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நோய்களுக்கான தீர்வுகளும் அளிக்கப்படுகின்றன. அனைத்துக் கேள்விகளுக்கும் முழு அளவிலான பதில்கள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியை மிருணாளினி தொகுத்து வழங்குகிறார்.

News 7 Tamil program Doctaridam Kelungal