“நம் உலகம்”

“நம் உலகம்”
News 7 Tamil presents Nam Ulagam

(திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 3.30 மணிக்கு)

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “நம் உலகம்”. உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் இந்நிகழ்ச்சியில் அளிக்கப்படுகின்றன.

நடப்பு நிகழ்வுகள், அரசியல் செய்திகள் மற்றும் பல்வேறு துறைசார் செய்திகள் இதில் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் மட்டுமின்றி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்நிகழ்ச்சி தயாரிக்கப்படுகிறது. தினமும் இந்த செய்திகளைப் பார்த்து வந்தால் தேர்வில் இடம்பெறும் நடப்பு நிகழ்வுகள் பற்றிய வினாக்களுக்கு துல்லியமாக மாணவர்கள் பதில் அளிக்க முடியும்.

உலகின் மிக முக்கிய நடப்புக்கள் விரிவாக எளிதில் புரியும் படி வழங்கப்படுகிறது. சர்வதேச தரத்தில், துல்லியமான தகவல்களுடன் செய்திகளை அளிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும், செய்திகளை உடனுக்குடன் வழங்குதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் எல். துரைராஜ் கூறுகிறார்.

News 7 Tamil presents Nam Ulagam