“நீயின்றி அமையாது உலகு”

(ஞாயிறு தோறும் காலை 10.30 மணிக்கு)
நமது புதிய தலைமுறையில் ஒளிபரப்பப்பட்டுவரும் நிகழ்ச்சி “நீயின்றி அமையாது உலகு”. இந்நிகழச்சி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 10.30 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.
இந்த உலக இயக்கத்திற்கு ஒவ்வொரு மனிதரின் பங்களிப்பும் முக்கியமானது. இதை அடிப்படையாகக் கொண்டு ஒரே வேலையைச் செய்யக்கூடிய பல்வேறு நபர்களை ஒன்ற அழைத்து அவர்களது வேலை பற்றியும் வாழ்க்கை பற்றியும் கலந்துரையாடும் நிகழ்ச்சிதான் நீயின்றி அமையாது உலகு.
இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்கள் கலந்துகொள்கிறார்கள். இன்றைய பெண்கள் மகப்பேறு நிலையை எப்படி கையாளுகிறார்கள்? கருத்தரிப்பு சிக்கல்கள் இன்று அதிகரித்திருக்க காரணம் என்ன? திருமணம் குழந்தைப்பேற்றை இன்றைய இளம் பெண்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் பேசுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஹரிகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் காலை 10.30 மணிக்கும் இதன் மறு ஒளிபரப்பு அன்று மாலை 7.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.