“நான் ஸ்டாப் 100”

“நான் ஸ்டாப் 100”
“நான் ஸ்டாப் 100” (NON STOP 100)
“நான் ஸ்டாப் 100”

“நான் ஸ்டாப் 100” (NON STOP 100)

 

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் காலை 7:30 மணிக்கு புதுமையான முறையில் “நான் ஸ்டாப் 100” என்ற தலைப்பில் செய்தித்தொகுப்பு ஒளிபரப்பாகிறது.

 

அரைமணி நேரத்தில் 100 செய்திகளை விளம்பர இடைவெளி இல்லாமல் அள்ளித்தரும் “நான் ஸ்டாப் 100”, தமிழ் செய்தி ஊடகங்களிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்ட வித்தியாசமான முயற்சி. வழக்கமான செய்தி வடிவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள விவகாரங்கள், வைரல் வீடியோக்கள், குற்றச் சம்பவங்கள், விளையாட்டு, பொருளாதாரம், அறிவியல், பயனுள்ள தகவல்கள், தமிழக நிகழ்வுகள், தேசியச் செய்திகள், சர்வதேச அளவிலான நிகழ்வுகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 100 செய்திகள் வரிசைப்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றன.

 

ஒளிப்பட காட்சிகள், நவீன வரைகலைத் தொழில்நுட்பங்கள் உதவியுடன் NON STOP 100-ல் தகவல்கள் சுவாரஸ்யமான வடிவத்தில் வழங்கப்படுகின்றன. இதை www.ns7.tv என்ற நியூஸ் 7 தமிழ் இணைய தளத்திலும் யூ டியூப் பக்கத்திலும் பார்க்கலாம். இந்நிகழ்ச்சியை வைகறை வருணன் ,டேஃப்னி மற்றும் நிவேதிதா தொகுத்து வழங்குகின்றனர்.