நீட் தேர்வில் தோல்வி: மாணவன் தற்கொலை

நீட் தேர்வில் தோல்வி: மாணவன் தற்கொலை
NEET Exam a 19 year old boy commits suicide

புதுடெல்லி: இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கு என ஒரே தகுதித்தேர்வாக அறிவிக்கப்பட்டது நீட் தேர்வு. இந்த தேர்வு முறை அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் டெல்லியைச் சேர்ந்த பர்னவ் மெஹன்டிரடா என்ற 19 வயது மாணவர் 8-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், கடந்த 2 ஆண்டுகளாக மாணவர் நீட் தேர்வு எழுதி வருவதாகவும், ஆனால் தொடர்ந்து தோல்வியுற்றதால் மனம் உடைந்த பர்னவ் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், மாணவர் பிரனவின் அறையில் இருந்த அவரது இறுதி கடிதத்தில், நீட் தேர்வு முடிவுகள் குறித்து பெற்றோரிடம் பொய் கூறிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். பிரனவ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தூக்கு போட்டுக்கொள்ள முயற்சித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

NEET Exam a 19 year old boy commits suicide