மும்பை தெரு உணவு திருவிழா

மும்பை தெரு உணவு திருவிழா
Mumbai Street Food Festival 2017 by SRM Hotel

நேரம் காலம் இல்லாமல், மழை வெயில் பார்க்காமல் ஏழை பணக்காரன் என்ற பேதமில்லாமல் எல்லாராலும் ரசித்து ருசித்து அனுபவிக்கக் கூடியவை மும்பை தெருக்களில் விற்கப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற தெரு உணவுகள்.

இத்தெரு உணவுகளில் மிகப்பெரிய பட்டியல் நம் SRM HOTEL POOL VIEW RESTAURANT இல் மே மாதம் 10 ஆம் தேதி துவக்கி 24 ஆம் தேதி வரை மும்பை தெரு உணவு திருவிழா நடை பெற உள்ளது.

மிருதுவான பாவுகளுடன் மிக அருமையாக கண்ணை கவரும் விதம் தயாரிக்கப்பட்ட பாவு பாஜி, வதக்கிய பச்சை மிளகாய் கொண்டு செய்யப்பட்ட வடையை, கொத்தமல்லி சட்னியுடன் சேர்த்து உண்ணும் போது நம் மனதை கவர வைக்கும் எல்லா உணவுகளும் நம் நாக்கின் சுவையை தட்டியெழுப்புகின்றது.

சைவம் மற்றும் அசைவ பிரியர்களுக்கென்று பெரிய பட்டியலில் வகைப்படுத்தப்பட்ட உணவானது பார்ப்போரின் கண்களை கவர்ந்து ருசிக்க தூண்டும். நம் கண்களின் முன் கேட்டவுடனே நேரில் செய்து தரக்கூடிய லைவ் கவுண்டர்கள், நம் கண்களில் கண்ணீர் வரவழைக்கக் கூடிய அளவிற்கு சுட சுடவென்று ருசியானவையாயிருக்கும்.

மிகவும் காரசாரமான காஷ்மீர் மிளகாயில் செய்யப்பட்ட மார்வாடி சிக்கன் குழம்பு, சிக்கன் பிரியர்களுக்கு ஏற்ற ஒரு மிகச்சிறந்த விருந்தாகும். அத்துடன் மைதா ரொட்டியை சேர்ப்பது இவ்வுலகில் நாம் வாழும் வாழ்க்கையில் வேறு என்ன நமக்கு வேண்டும் இதைத்தவிர என்று என்ன தோன்றும்.

இவை எல்லாவற்றையும் அனுபவிக்க, ருசிக்க, குடும்ப நண்பர்களுடன் மும்பை தெரு உணவுகளை மகிழ்ந்து கொண்டாட SRM HOTEL இன் POOL VIEW RESTAURANT வாரீர்!

Mumbai Street Food Festival 2017 by SRM Hotel