‘ரோட் டு ஸ்கூல்’

‘ரோட் டு ஸ்கூல்’

அசோக் லேலேண்ட், தனது ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டத்தை நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் 45 பள்ளிக்கூடங்களுக்கு விரிவுப்படுத்தி இருக்கிறது!

* நாமக்கல், மோகனூர், பரமத்தி மற்றும் எருமப்பட்டி ஆகிய நான்கு கல்விப்பகுதிகளில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

* அசோக் லேலேண்டின் ’ரோட் டு ஸ்கூல்’ திட்டம் மூலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4,700 மாணவர்கள் பலனடைவார்கள்.

* ’ரோட் டு ஸ்கூல்’ திட்டமானது இந்த வருடம் 19,700 மாணவர்களைச் சென்றடையும்.

நாமக்கல், தமிழ்நாடு, ஜூலை 2017: ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமும், இந்தியாவின் இரண்டாவது மாபெரும் கமர்ஷியல் வாகன உற்பத்தி  (commercial vehicle - CV) நிறுவனமுமான அசோக் லேலேண்ட், இன்று தனது பெருநிறுவன சமூகப்பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாட்டு திட்டங்களில் ஒன்றான ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டத்தை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 45  பள்ளிக்கூடங்களுக்கு விரிவுப்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ’சூளகிரி’ மற்றும் ’அஞ்செட்டி’, திருவள்ளூர் மாவட்டம் ‘புழல்’ மற்றும் ‘மீஞ்சூர்’ கல்விப் பகுதிகளைத் தொடர்ந்து, அசோக் லேலேண்ட் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் நாமக்கல், மோகனூர், பரமத்தி மற்றும் எருமப்பட்டி ஆகிய நான்கு கல்விப் பகுதிகளில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் ஆரம்பக்கல்வி மற்றும் நடுநிலைக்கல்வியை மேம்படுத்தும் விதமாக தனது ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டத்தை விரிவுப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் இத்திட்டம் 4,700 மாணவர்கள் என்ற நிலையில் இருந்து இந்த வருடத்திற்குள் 19,700 மாணவர்களைச் சென்றடையும்.

’ரோட் டு ஸ்கூல்’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் இந்த அருமையான தருணத்தில் பேசிய அசோக் லேலேண்ட்டின் நிர்வாக இயக்குநர் திரு. வினோத் கே தாசரி (Mr. Vinod K. Dasari, Managing Director, Ashok Leyland Ltd.), "அசோக் லேலேண்ட் மற்றும் என்னைப் பொறுத்தவரை சமுதாயத்தை ஏற்றத்தாழ்வில்லாமல் சமநிலைப்படுத்தும் ஒரு அருமையான விஷயம் கல்வி என்பதில் உறுதியான நம்பிக்கை இருக்கிறது. அதற்கு நம்மால் முடிந்தது, எதிர்க்கால தலைமுறைக்கு கல்வி கற்க உதவிப்புரிவது. அதன்மூலம் அவர்களை கல்வியறிவுள்ள இந்திய குடிமக்களாக உருவாக்க முடியும். இந்த எண்ணத்தின் தொடர்ச்சியாக, பத்தாண்டுகளுக்கு முன்பாக அசோக் லேலேண்ட் கல்வித்துறையில் தன்னுடைய பங்களிப்பை ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டம் மூலம் உற்சாகமாக ஆரம்பித்தது.

‘ரோட் டு ஸ்கூல்’ திட்டமானது ’சூளகிரி’ மற்றும் ’அஞ்செட்டி’ பகுதிகளில் ஆரம்பமானது. இன்று இத்திட்டத்தின் மற்றொரு மைல்கல்லாக, மேலும் கூடுதலாக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 45 பள்ளிக்கூடங்களை சேர்த்து ’ரோட் டு ஸ்கூல்’ திட்டத்தை விரிவுப்படுத்தி இருக்கிறோம். எங்களால் முடிந்த இந்த சிறு முயற்சியால், 4,700 மாணவர்களிடம் ஒரு அருமையான, சமூகத்திற்கு அவசியமான ஒரு நல்ல மாற்றத்தை எங்களால் உருவாக்க முடியும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.’’ என்றார்.

இத்திட்டத்தை முன்னெடுத்து செல்லும்,  அசோக் லேலேண்ட்டின் மனிதவளம், கம்யூனிகேஷன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாடுகள் பிரிவின் தலைவர் திரு. என்.வி. பாலச்சந்தர் (Mr. N.V Balachandar, President – HR, Communication and CSR, Ashok Leyland) கூறுகையில், ‘’கல்வி  மிக மிக முக்கியமான முயற்சியாக இருக்கிறது. அந்த வகையில் ரோட் டு ஸ்கூல்’ முயற்சிக்கும், எங்களுக்கும் இந்தப்பயணம் மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவும், நல்ல பலனளிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களிடம் குறிப்பிடுமளவுக்கு நல்ல மாற்றத்தை எங்களால் உணர முடிந்திருக்கிறது.

தற்போது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் எங்களது இந்த குடும்பத்தில் ஒன்றாக இணைவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அரசுப்பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆரோக்கியம், சுகாதாரம், விளையாட்டு உள்பட உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மேம்படுத்தும் பயிற்சிகளினால், அவர்களது கல்வி சார்ந்த மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்ற அம்சங்களிலும் மேம்பட இத்திட்டம் மூலம் உதவிப்புரிவது எங்களுக்கு உற்சாகமளிக்கிறது. இதனால் இத்திட்டம் எங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாகும். மேலும் சமூகத்திற்கு பெரும் மாற்றத்தைக் கொடுக்கும் இத்தகைய  ‘ரோட் டு ஸ்கூல்’ திட்டத்தை எங்களது கடமையாகவும், பொறுப்பாகவும் எடுத்து கொண்டிருக்கிறோம்.’’ என்றார்.

’ரோட் டு ஸ்கூல்’ திட்டமானது, ஆரம்பமானதிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் குறிப்பிட்டு சொல்லுமளவுக்கு வெற்றியைப் பெற்று சாதித்து இருக்கிறது. அந்தவகையில் முக்கியமானவை :

* இரண்டாம் வகுப்பு முதல் ஏழாவது வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களிடையே கற்கும் அளவு 20% முன்னேற்றமடைந்து இருக்கிறது. இது பேஸ் லைன் மற்றும் எண்ட் லைன் டெஸ்ட் மூலம் கணக்கிடப்