'மெட்டி ஒலி'

தாய் இல்லாத ஐந்து பெண் பிள்ளைகளை மிகவும் பாசமாக வளர்கிறார் , அவர்களும் தங்களது குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப தந்தைக்கு ஒத்துழைப்பதோடு ,ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
அந்த தந்தை மகள்கள் ஐந்து பேரின் திருமணத்தை எப்படி அவர் நடத்தி வைக்கிறார் , மகள்களின் திருமண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பிரச்சனையை எப்படி தீர்த்து வைக்கிறார் அதனால் அவர் எப்படி பாதிப்படைகிறார், மகள்கள் அவர்களது கணவர் விட்டில் இருப்பவர்களால் ஏற்படும் கஷ்டங்களை எப்படி தந்தைக்கு தெறியாமல் சமாளிக்கிறார்கள் என்பதை யதார்த்தோடு எடுத்துரைக்கும் நெடுந்தொடர் 'மெட்டி ஒலி'.
சேத்தன் ,காவேரி ,நீலிமா ராணி ,சிந்து ,தீபா வெங்கட் ,காயத்ரி ,நித்யா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் திருமுருகன் இயக்குகிறார் .நேயர்களின் சொந்த வாழ்க்கையோடு ஒற்றுபோவதால் இந்நெடுந்தொடர் மக்களிடம் மிகுந்த வரவேற்ப்பு பெற்றுள்ளது.
இந்நெடுந்தொடர் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7:00 மணி மற்றும் பகல் 12.30 மணிக்கு மூன் டிவியில் ஒளிபரப்பாகிறது.