ட்ரான்ஸ் ஸ்டேடியாவின் 'தி அரீனா'

ட்ரான்ஸ் ஸ்டேடியாவின் 'தி அரீனா'

ஆசியாவின் மிகச்சிறந்த ஒருங்கிணைக்கப்பட்ட நகர்ப்புற விளையாட்டு உள்கட்டமைப்பான ட்ரான்ஸ் ஸ்டேடியாவின் 'தி அரீனா' என்ற அரங்கை மேன்மைதாங்கிய இந்திய பிரதம மந்திரி ஸ்ரீ் நரேந்திர மோடி அவர்கள் துவக்கி வைத்தார்

ட்ரான்ஸ் ஸ்டேடியா விளையாட்டு செயல்பாட்டுத்திறன் & புனர்வாழ்வு மையம் என்ற ஒருங்கிணைக்கப்பட்ட விளையாட்டு அறிவியல் வசதி மையத்தை துவக்கி வைத்தார்

குஜராத்தில், அஹமதாபாத் நகரில் “ட்ரான்ஸ் ஸ்டேடியாவின்" 'தி அரீனா’ என்று அழைக்கப்படும் உலகத்திலேயே மிகச் சிறந்த ஒருங்கிணைக்கப்பட்ட விளையாட்டு அரங்கத்தை மேன்மைதாங்கிய இந்தியப் பிரதமர் ஸ்ரீ் நரேந்திர மோடி துவக்கிவைத்த இந்த நாள் இந்திய விளையாட்டுத் துறையின் சரித்திரத்தில் ஒரு பொன்னாளாக பொறிக்கப்படும், இது நகர்ப்புற விளையாட்டு உள்கட்டமைபுக்காக இந்தியாவில் முதல் முதலாக முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான அரசு மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சியாகும்.

எஸ்ஈ ட்ரான்ஸ் ஸ்டேடியாவின் தலைவர், ஹரிஷ் சேத், மற்றும் நிர்வாக இயக்குனர் உதித் சேத் ஆகியோர் உடன் வர அரங்கத்தை அது வழங்கும் வசதிகளை, மற்றும் அதன் நடைமுறைகளை, பிரதம மந்திரி, திறனாய்வு செய்தார், வலிமைமிக்க ஆரோக்கியமான இந்தியாவை  உருவாக்கும் குறிக்கோளோடு அமைக்கப் பெற்ற ஊடுறுவலற்ற சிகிச்சை, மற்றும் மதிப்பீட்டு முறை,  மனித செயல்திறன் பரிசோதனைக் கூடம், மற்றும் தேவைக்கு தகுந்து வடிவமைக்கப்பட்ட செயல்திட்டங்கள் ஆகியவற்றுடன் கூடிய  இற்றைக்கலை நிலை ட்ரான்ஸ் ஸ்டேடியா விளையாட்டு செயல்பாட்டுத்திறன் & புனர்வாழ்வு மையத்துக்கு முதலில் பிரதம மந்திரி வருகை தந்து  துவக்கி வைத்தார்.

இந்த மையத்தில் அமைந்துள்ள மதிப்பீட்டு முறை மற்றும் ப்ரோ ரியாக்க்ஷன் டைமர், ஸ்விஃப்ட் ஸ்பீட் லைட், டச் மேட் / ஸ்பீடு மேட் மற்றும் பல பயிற்சிக்கான கருவிகள்  இந்தியாவில் முதல் முதலாக அமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் அவர் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள  இளம் வயதினரை  பரிசோதித்து அவர்களின் தனிப்பட்ட திறமைகளுக்கு உகந்த விளையாட்டுப் பிரிவுகளை அடையாளம் காட்டி  வழிகாட்டி உதவிட மருத்துவ நிபுணர்களைக் கொண்ட நடமாடும் மருத்துவ வாகனத்தையும் பார்வையிட்டார். விளையாட்டு அறிவியல் மையம் காயம்பட்ட தனிப்பட்ட வீரர்களுக்கும் மற்றும் மிக உயரிய உடல் செயல்திறனை வேண்டும் விளையாட்டு வீரர்களுக்கும் உயர்ரக நிவாரணம் மற்றும் சிகிச்சையை அளிக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் போது பேசிய எஸ்ஈ ட்ரான்ஸ் ஸ்டேடியாவின்  நிர்வாக இயக்குனர் உதித் சேத் சொன்னார், “மேன்மை தாங்கிய பிரதம மந்திரி ஸ்ரீ் நரேந்திர மோடியின் கருத்திலும் எங்கள் கருத்திலும் உதித்த கனவு “அரங்கத்தை”  அவர்கள் தொடங்கி வைத்திருப்பது நமக்கு வாய்க்கப் பெற்ற மிகப்பெரிய கௌரவமும் சிறப்பும் ஆகும்.இதே போன்ற உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டு உள்கட்டமைப்பின் பயன்பாடு மூலம் பலதரப்பட்ட வலுவான வருவாய் மாதிரிகளை நாம் உருவாக்க முடியும். இப்படி தான் வியாளையாட்டு துறை ஒரு தொழில் துறையாக மாற முடியும்.

இந்த புதிய நகர்புற மையம், ஏனைய நகர்புற மையங்களையும் விளையாட்டு துறையில் இந்திய வீரர்களின் செயல்திறனையும் உடல் நலம், மன நலம் மற்றும் ஓய்வு சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் மாற்றி அமைக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உலக அளவிலயே மிக நவீனமான விளையாட்டாரங்கத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்"

பிரதம மந்திரி மேலும் அந்த அரங்கத்தின் சிலிர்க்கவைக்கும் பிரம்மாண்டமான தோற்றத்தையும், சீதோஷ்ண நிலை கட்டுப்பாட்டுடன் கூடிய நீச்சல் குளம், பரந்து விரிந்து அமையப்பெற்ற உடற்க்கட்டமைப்பு மையம் ஆகியவற்றை அரங்கத்தின் 5 ஆவது தளத்திலிருந்து கண்டு களித்தார். அதன் பிறகு “தி அரீனா” வின்  உள் விளையாட்டு வசதிகளை நேரில் சென்று கண்டு களித்தார். மேலும் சிறுவர்கள் விளையாட்டுப் பகுதிக்கும் சென்றார்.

இந்த நிகழ்ச்சிக்கு தங்களது ஆதரவை நல்கும் விதமாக இந்தியாவின் சரித்திரப் புகழ் பெற்ற தலைசிறந்த விளையாட்டு வீரர்களான முன்னணி இறகுப்பந்து பயிற்சியாளர், புலேலா கோபிச்சந்த்,; ஒலிம்பிக்  வீரர்களான ஸ்ரீ்காந்த் கிடாம்பி, ககன் நரங், சுஷில் குமார்; மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் வீராங்கனை தீபா மாலிக்; முன்னாள் இந்தியக் கபடிக் குழுத் தலைவர் அனூப் குமார்; முன்னாள் இந்திய கால் பந்தாட்டக் குழுத்தலைவர் பைச்சங் புட்டியா மற்றும் தங்களது சொந்த மாநிலமான குஜராத் சார்பாக உள்ளூர் ஆட்டங்களில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்ஃபான் பதான் மற்றும் பார்த்திவ் படேல்  ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

ஆர்ப்பரிக்கும் அவையோர் மத்தியில் கால் பந்தாட்ட அரங்கிற்கு  மேன்மை தாங்கிய பிரதம மந்திரி வருகை தந்தவுடன் அந்த அரங்கில் அமைந்துள்ள  பல உலக காப்புரிமை பெற்ற தொழில் நுட்ப வசதிகள் அவருக்கு காண்பிக்கப்பட்டது. இதில் பிரதம மந்திரி ஒரு பொத்தானை சொடுக்கி திறந்து வைத்த கணத்தில் உள் விளையாட்டு அரங்கமாக தானாக தன்னை உருமாற்றிக்கொண்ட டி-பாக்ஸ் அமரும் வசதி மற்றும்  ஸ்டேடிஅரீனா அரங்கும் அடங்கும். மேன்மைதாங்கிய பிரதம மந்திரியை குஜராத் முதல்வர் ஸ்ரீ் விஜய் ரூபான