உளுந்தூர்பேட்டையில் காலணி ஆலை அமைக்க தமிழ்நாடு அரசுடன் தைவான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன் கையெழுத்தானது..!!

சென்னை: உளுந்தூர்பேட்டையில் காலணி ஆலை அமைக்க தமிழ்நாடு அரசுடன் தைவான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் அறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தைவான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் முன்னிலையில் கையெழுத்தானது.

உளுந்தூர்பேட்டையை அடுத்த ஆசனூர் சிட்கோ வளாகத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ரூ.2,300 கோடி முதலீட்டில் விளையாட்டு வீரர்களுக்கான காலணி தயாரிக்கும் ஆலையை நிறுவ முன் வந்துள்ளது. தடகளப் போட்டி வீரர்களுக்கு காலணி தயாரிக்கும் தைவானைவை சேர்ந்த முன்னணி நிறுவனமான ‘போ சென்’ சீனா, வியட்நாம், இந்தோனேசியா, கொலம்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் தடகள வீரர்களுக்கான பிரத்யேக ஷூக்களை தயாரித்து உலகம் முழுவதும் சந்தைப் படுத்தி வருகிறது.

அந்த நிறுவனம் தற்போது இந்தியாவிலும் கால்பதிக்க முயன்று, பல்வேறு மாநிலங்களில் தொழிற்சாலைகளை உருவாக்க இடம் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆசனூரில் உள்ள சிட்கோ வளாகத்தில் தனது ஆலையை நிறுவ முன் வந்துள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுமார் 78 சதவீதம் வரையில் பெண்களே இதில் பணியமர்த்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காலணி ஆலை அமைக்க தமிழ்நாடு அரசுடன் தைவான் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.