ரஜினிகாந்த் கருத்தை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினிகாந்த் கருத்தை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்
Minister Jayakumar attacks Rajinikanth comments

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் சிலையை நேற்று திறந்து வைத்து அந்த விழாவில் பேசும்போது, 1996 முதல் அரசியல்வாதிகள் அவர்களது வேலையை சரியாக செய்யவில்லை. மக்களுக்கு நான் கடமை செய்ய வேண்டியுள்ளதால் தான், நான் அரசியலுக்கு வந்தேன். என்று கூறினார்.

இந்தநிலையில், ரஜினிகாந்தின் கருத்துக்கு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:-

மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நடிகர் ரஜினி மாணவர்கள் மத்தியில் கூறி இருப்பது முரண்பாடாக உள்ளது. ரஜினி ஆங்கிலத்தை படிக்க சொல்கிறார். அப்பா, அம்மா என்று நாம் தமிழில் சொல்கிறோம். அவர், “மம்மி, டாடி” என்று கூப்பிட சொல்கிறார்.

எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இந்த இயக்கத்திற்கும் இரட்டை இலைக்கும் தான் மக்கள் ஓட்டுப்போடுவார்கள்.

எவ்வளவு தான் உயர உயர பறந்தாலும் குருவி குருவி தான். ஊர்க்குருவி பருந்தாகாது, அது போலத்தான் ரஜினியும்.

நடிகர் பாக்யராஜ் கட்சி தொடங்கி என்ன ஆனார் என்பது மக்களுக்கு தெரியும்.

மு.க.ஸ்டாலினுக்கு எப்போதுமே இந்த ஆட்சியை கலைப்பது பற்றிய நினைவு தான். அது ஒரு நாளும் நடக்காது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் பூர்த்தி அடைந்து அடுத்த சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Minister Jayakumar attacks Rajinikanth comments