மினி லாரி மோதி குடும்பத்துடன் 4 பேர் பலி

மினி லாரி மோதி குடும்பத்துடன் 4 பேர் பலி
Mini Lorry accident kills 4 peoples in Tiruvannamalai district

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த காங்கேயனூர் கிராமத்தைச் சேர்ந்த பலராமன் என்பவரது மகன் பார்த்திபன் (21). பொக்லைன் இயந்திர ஓட்டுநரான இவர், உறவினரது திருமண நிகழ்ச்சிக்காக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த திருவம்பட்டு கிராமத்தில் இருந்து தனது சகோதரி சத்யா (25), அவரது கணவர் சக்திவேல் (28), அவர்களது மகள் துர்கா (4) ஆகிய 3 பேரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு போளூர் பேருந்து நிலையத்துக்கு நேற்று காலை வந்துள்ளார். காங்கேயனூர் கிராம சாலை வளைவில் இருந்து செங்கம் - போளூர் நெடுஞ்சாலையில் வந்தபோது, இரு சக்கர வாகனம் மீது எதிர் திசையில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த மினி லாரி மோதியது. இந்த விபத்தில் பார்த்திபன், சத்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சக்திவேல் மற்றும் துர்கா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

Mini Lorry accident kills 4 peoples in Tiruvannamalai district