டீப் ந்யூரல் நெட்வொர்க்ஸ்

டீப் ந்யூரல் நெட்வொர்க்ஸ்
Microsoft introduces Deep Neural Networks and AI

இந்தி, பெங்காலி மற்றும் தமிழ் நிகழ் நேர மொழிபெயர்ப்பை விரிவுபடுத்த மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தும் டீப் ந்யூரல் நெட்வொர்க்ஸ்

இந்தி, பெங்காலி மற்றும் தமிழ் நிகழ் நேர மொழிபெயர்ப்பை மேம்படுத்துவதுடன், அனைவருக்கும் தொழில்நுட்பத்தை மேலும் அணுக்கமாகவும், உற்பத்தித் திறன் கொண்டதாகவும் மாற்றும் முனைவுகளின் ஒரு பகுதியாகச்,  செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் டீப் ந்யூரல் நெட்வொர்க்ஸ் (டிஎன்என்) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு குறித்த அறிவிப்பை மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. எட்ஜ் ப்ரௌசர்,  மைக்ரோசாஃப்ட் பிங் சர்ச், பிங் ட்ரான்ஸ்லேட்டர் வலைதளம், மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 365 பொருள்களான வேர்ட், எக்ஸெல், பவர்பாயிண்ட், அவுட்லுக், ஸ்கைப் ஆகியவற்றில் இணையத்தைப் பயன்படுத்தும் போது முடிவுகள் துல்லியமாகவும், இயற்கையாகவும் கிடைக்க இத்தொழில்நுட்பம்  உதவும். 

ட்ரான்ஸ்லேட்டரில் உள்ள செயற்கைக்கோள் டிஎன்என் அடிப்படையிலான அம்சமாக விளங்கும் ‘ட்ரூ டெக்ஸ்ட்’, இயல்புக்கு மாறான சொற்கள், மீண்டும் வருபவை, இடைவெளிகள் ஆகியவற்றை நீக்கி மொழிபெயர்ப்பை சிறப்பாக்கும்.  இத்தொழில்நுட்பம் ஆண்ட்ராயிட் மற்றும் ஐஓஎஸ் பயனீட்டாளர்களுக்கு மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலி மூலம் கிடைக்கும்.  இது எழுத்து, பேச்சு மற்றும் நிழற்படங்களிலிருந்து மொழிகளை அடையாளம் கண்டு மொழிபெயர்க்கும். கூட்டாளிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மைக்ரோசாஃப்ட் அஜூரில் ஏபிஐ வழங்கப்படுவதால் தங்கள் பொருள்களில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது குறித்து மைக்ரோசாஃப்ட் இந்தியா, ஏஐ & ஆய்வு, பொது மேலாளர், சுந்தர் ஸ்ரீநிவாசன் கூறுகையில் ‘ஒவ்வொரு இந்தியனையும், இந்தியாவிலுள்ள ஒவ்வொரு வணிகத்தையும், அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் வழியே டிஜிடல் இந்தியாவிற்கான உந்து சக்தியாக மாற்றுவதன் மூலம் ஆற்றலை வழங்குவதே எங்கள் நோக்கமாகும். இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளைக் கொண்டாடுவதுடன், பிரம்மாண்ட இணையத்தை இன்னும் அணுக்கமாக்க மைக்ரோசாஃப்ட் விரும்புகிறது.  கடந்த இருபது வருடங்களாக இந்திய மொழிகளின் கணினியாக்கத்திற்குத் துணையாக இருந்ததுடன், சமீபத்தில் ஒலி அடிப்படையிலான அணுக்கம் மற்றும் பல்வேறு மொழிகளின் எந்திர மொழிபெயர்ப்பிலும் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம். இந்தியாவிலுள்ள ஒவ்வொருவருக்கும் தகவலை அணுக்கமாக்குவதற்கான அதி நவீன எந்திரக் கற்றல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் எங்கள் ஆர்வத்திற்கான சான்றே இந்த அறிவிப்பாகும்’என்றார்.

2000 ஆண்டு தொடங்கி மைக்ரோசாஃப்ட் உலகளாவிய மற்றும் இந்திய மொழிகள் மொழிபெயர்ப்பில் பாரம்பரிய புள்ளிவிவர எந்திர மொழிபெயர்ப்பை (எஸ்எம்டி) அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.  சிக்கலான இந்திய மொழிகளின் மொழிபெயர்ப்பில்  கூடுதல் துல்லியத்தையும், சரளமான மொழிபெயர்ப்பையும் கொண்டு வர டீப் ந்யூரல் நெட்வொர்க்ஸ் ஒருங்கிணைக்கப்பட்டது. பாலினம் (ஆண், பெண், மூன்றாம் பாலினம்), பேச்சு (வட்டாரம், இயல்பான, எழுத்து, முறையான), சொல் வகை (வினைச்சொல், பெயர்ச்சொல், உரிச்சொல்) ஆகியவற்றைக் குறியீடாக்கும் திறன் டீப் ந்யூரல் நெட்வொர்க்ஸுக்கு உண்டு.

இந்திய மொழிகளில் குறிப்பாக திராவிட மற்றும் ஆரியம் உள்ளிட்ட உட்பிரிவுகளை மொழிபெயர்ப்பதில் உள்ள பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்க டீப் ந்யூரல் நெட்வொர்க்ஸ் ஆற்றல் கொண்ட மொழிபெயர்ப்பு அமைப்புகள், தானி மற்றும் மனிதத் தர மதிப்பீடு மெட்ரிக்ஸ்களில் கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன.   குறிப்பாக அனைத்து இந்திய இந்திய மொழிகளின் மொழிபெயர்ப்பில் 20% மேம்பாட்டுக்கு மைக்ரோசாஃப்ட் ஆதரவுவே காரணமாகும்.

1998இல் அறிமுகமான ப்ராஜெக்ட் பாஷா மூலம் மொழிபெயர்ப்பில் கணினியின் பயன்பாட்டை அதிகரிக்க மைக்ரோசாஃப்ட் தீவிரவாக உள்ளது.  இதற்கெனக் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய மொழிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.  அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரித்த 22 மொழிகளின் எழுத்து உள்ளிட்டுக்கு மைக்ரோசாஃப்ட் தனது அனைத்துப் பொருள்கள் மூலமும் ஆதரவளிக்கிறது. 12 மொழிகளில் இடைமுகத்துடன், பாஷாஇந்தியா.காம் என்ற பிரத்யேக வலைவாசல் மூலம் இந்திய மொழிகளுக்கான கணினியாக்கக் கருவிகளுக்கு உறுதுணையாக உள்ளது. மக்களின் வாழ்க்கை மேம்படவும், செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) ஆற்றலில் நம்பிக்கை கொண்டுள்ள மைக்ரோசாஃப்ட், ஏஐ ஆற்றலில் இயங்கும் தீர்வுகளைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் வேளாண்மை, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, ஆளுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆக்கப்பூர்வ விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.  

Microsoft introduces Deep Neural Networks and AI