(ஹெச் ஐ எம் எஸ் எஸ்) வருடாந்திரக் கருத்தரங்கு

(ஹெச் ஐ எம் எஸ் எஸ்) வருடாந்திரக் கருத்தரங்கு
Microsoft and Apollo Hospitals early detection of cardiac diseases using AI

அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் இன்று சுகாதாரத் தகவல் மற்றும் மேலாண்மை அமைப்புகள் சங்கத்தின் (ஹெச்ஐஎம்எஸ்எஸ்) வருடாந்திரக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் இந்தியாவின் மிகப் பெரிய சுகாதார அமைப்புகளுள் ஒன்றான அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து, இதய சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவை நோக்கமாகக் கொண்ட வலைப்பணியை உருவாக்க, இப்போது சுகாதாரப் பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு வலைப்பணி என்றழைக்கப்படும் கண் பாதுகாப்புக்கான மைக்ரோசாஃப்ட் நூண்ணறிவு வலைப்பணியை (ஏம்ஐஎன்இ) விரிவுபடுத்த உள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்தது. 

மைக்ரோசாஃப்ட் ஹெல்த்கேர் நெக்ஸ்ட்டின் ஒரு பகுதியான சுகாதாரப் பாதுகாப்புக்கான செயற்கை நுண்ணறிவு வலைப்பணி, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேகக் கணினியாக்கம் மூலம் சுகாதாரப் பாதுகாப்பில்  புதுமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் மற்றும் அப்போலோ ஆகியவற்றிற்கு இடையேயான கூட்டாண்மை மூலம் இதய நோய்களுக்கான இடர்களைக் கணிக்கவும், சிகிச்சை திட்டங்களில் மருத்துவர்களுக்கு உதவவும்,  தேவையான புதிய எந்திரக் கற்றல் மாதிரிகளை உருவாக்கவும், பயன்படுத்தவும் இயலும். செயற்கை நுண்ணறிவு ஆற்றலுடன் இதய சிகிச்சை ஏபிஐ (செய்முறைத் திட்ட இடைமுகம்) தளத்தில் குழு ஏற்கனவே தனது பணியைத் தொடங்கி உள்ளது.

மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு & ஆய்வு, கார்பொரேட் துணைத் தலைவ்சர் டாக்டர் பீட்டர் லீ பேசுகையில் ‘சுகாதாரப் பாதுகாப்புக்கான செயற்கை நுண்ணறிவு வலைப்பணியின் நோக்கம், செயற்கை நுண்ணறிவைப் பரவலாக்கிச், சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவோருக்கு வேகமான, உடனடியான, கணிக்கத்தக்க தீர்வுகளை வழங்குவதுடன், நோய்ச் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதே ஆகும். அப்போலோ மருத்துவமனையுடனான எங்களது வித்யாசமான கூட்டாண்மை, செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரக் கற்றல் பகுதிகளில் எங்கள் கற்றலையும், அப்போலோவின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தையும் ஒருங்கிணைப்பதே ஆகும். நாங்கள் உருவாக்கும் நுண்ணறிவு அமைப்புகள் நோயாளியின் வாழ்க்கையிலும், மருத்துவர்களின் பணிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தி, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு அணுக்கத்தை இயலச் செய்யும்’ என்றார்.

அப்போலோ மருத்துவமனை  இணை மேலாண் இயக்குனர் சங்கீதா ரெட்டி தொடர்கையில் ‘இந்த இணைந்த செயல்பாடு நோயாளிகள் மற்றும் தொற்று அல்லாத நோய்களின் மேலாண்மையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் ஏற்படும் பெரும்பான்மை இறப்புக்கும்,  தீவிர நோய்க்கும் இதய நோயே முக்கியக் காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.  இது சுகாதாரம் மற்றும் குடிமக்களின் நலத்தையும் பாதிக்கிறது. எங்களிடமுள்ள தரவு மற்றும் கணிசமான மருத்துவத் திறன் ஆகியவை காரணமாக இந்தக் கூட்டாண்மை இதய நோய்களால் ஏற்படும் உலகளாவிய சுமையில் விளைவை ஏற்படுத்த உறுதுணையாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரக் கற்றல் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்பங்கள்  நாட்டின் இதய நோய் கணிப்பு, தடுப்பு, மேலாண்மை, சிகிச்சைக்கு உதவும். இந்தியாவில் தொடங்கியுள்ள நிலையில், இதய நோயிலுள்ள பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்க உலகளாவிய குழுவை உருவாக்கும் தீவிர முனைவுகளில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.

கூட்டாண்மை பற்றி மைக்ரோசாஃப்ட் இந்தியா (ஆர்&டி) மேலாண் இயக்குனர் மற்றும் க்ளௌட் & எண்டர்பிரைஸ், கார்பொரேட் துணைத் தலைவர் அனில் பன்சாலி கூறுகையில் ‘கடந்த இரு ஆண்டுகளாகச் செயற்கை நுண்ணறிவைச் சுகாதாரப் பாதுகாப்புக்குக் கொண்டு வர உள்ளூர், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைப்புகளைக் கொண்ட ஆற்றல்மிகு கூட்டாளியுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கண் பாதுகாப்புடன் தொடங்கி இன்றைக்கு இதயப் பாதுகாப்பு வரை விரிவடைந்துள்ளோம். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவோர் ஆழமான புரிதலுடன் சிறப்பான சிகிச்சையை வழங்கச் சுகாதாரப் பாதுகாப்புத் துறையிலுள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். அப்போலோ மருத்துவமனையுடனான எங்களது கூட்டாண்மை அனைவருக்கும் அணுக்கமான சுகாதாரப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்னும் பயணத்தில் முக்கிய மைல்கல் ஆகும்’ என்றார்.

ஹெச்ஐஎம்எஸ்எஸ் கருத்தரங்கில் மைக்ரோசாஃப்ட் சுகாதாரப் பாதுகாப்பு பிரிவில் ஏனைய திட்டங்கள் பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டது. மேலும் விவரங்களுக்கு Microsoft Blog பார்க்கவும்.

கண் பாதுகாப்புக்கான மைக்ரோசாஃப்ட் நுண்ணறிவு வலைப்பணி (எம்ஐஎன்இ) என்பது கண் பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த குழுவாகும்.  எல் வி பிரசாத் கண் நிலையம் தலைமை வகிக்க, மியாமி பல்கலைக்கழக பாஸ்காம் பால்மர், ரோசெஸ்டர் பல்கலைக்கழக (அமெரிக்கா) ஃப்ளாம் கண் நிலையம், சாவோ பாலோ ஃபெடரல் பல்கலைக்கழகம் (பிரேசில்), ப்ரேன் ஹோல்டன் விஷன் நிலையம் (ஆஸ்திரேலிரா) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

Microsoft and Apollo Hospitals early detection of cardiac diseases using AI