பியூபிஜி அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஓபோ எஃப்9 ப்ரோ

பியூபிஜி அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் ஓபோ எஃப்9 ப்ரோ

* டென்செண்ட் கேம்ஸுடன் இணைந்து இந்தியாவின் மிகப் பெரிய இ-ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் குறித்த அறிவிப்பு
* படிப்பு உதவித் தொகை உள்பட ரூ 50 லட்சம் ரொக்கப் பரிசு
* ஹோம் க்ரெடிட், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவற்றின் மீது அசத்தல் சலுகைகள் 

செல்ஃபி எக்ஸ்பர்ட் ஓபோ சமீபத்தில் உலகின் மிகப் பெரிய கேமிங்க் நிறுவனமான டென்செண்ட் கேம்ஸுடன் இணைந்து இந்தியாவின் மிகப் பெரிய இ-ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பான ‘பிளேயர் அன்னோன்ஸ் பேட்டில் க்ரவுண்ட்ச் மொபைல் கேம்பஸ் சாம்பியன்ஷிப் 2018’ போட்டிகளை நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த மெகா இ-ஸ்போர்ட்ஸ்போட்டி 2018 செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 21 வரை ஒரு மாத காலமும், இதைத் தொடர்ந்து கிராண்ட் ஃபினாலே இறுதிச் சுற்று பெங்களூரிலும் நடைபெறும். 

ஓபோ சமீபத்தில் அறிமுகப்படுத்திச் சாதனை ஏற்படுத்திய ஓபோ எஃப் 9 ப்ரோ வழியே இந்தச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும். எஃப்9 ப்ரோவின் ஆற்றல்மிகு அம்சங்கள் பியூபிஜி கேமிங்க் அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.  நாடு முழுவதும் 30+ நகரங்களைச் சேர்ந்த 2000 கல்லூரிகளை உள்ளடக்கிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக ஓபோ நிறுவனம் மொத்தம் ரூ 50 லட்சம் ரொக்கப் பரிசு பூலிங்க் ஸ்பான்ஸர் செய்துள்ளது. இந்த மெகா போட்டிகளில் மொத்தம் 10,000 குழுக்கள் பங்கேற்கும். பியூபிஜி விளையாட்டை ஒவ்வொரு குழுவிலுமுள்ள 4 வீரர்கள் ஆடுவர்.  

இது குறித்து ஓபோ இந்தியா பிராண்ட் இயக்குனர் வில் யாங்க் கூறுகையில் ‘வித்யாசமான அனுபவங்கள் வேண்டுமென விரும்பும் இந்திய இளைஞர்களின் தேவைகளை ஒபோ நிறைவு செய்கிறது. ஒரு பிராண்டாக அவர்களின் தேவைகளை நாங்கள் புரிந்து கொண்டு அவற்றை நிறைவு செய்ய ஓபோ எஃப் 9 ப்ரோ போன்ற அதி நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் பொருள்களைத் தொடர்ந்து தயாரிக்கிறோம். அவர்களின் படைப்புத்திறன் மிக்க சிந்தனையும், எங்கள் நவீன தொழில்நுட்பமும் இணைந்த மற்றும் வித்யாசமான அனுபவம் வழங்கப்படும். டென்செண்ட் கேம்ஸுடன் இணைந்து மாணவர்கள் கேமிங்க் அனுபவத்தை ஓபோ எஃப் 9 ப்ரோவில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெற வேண்டும் என்பதற்காக ரூ 50 லட்சம் ரொக்கப் பரிசு பூலிங்க் ஸ்பான்சர் செய்கிறோம்’ என்றார். 

டென்செண்ட் கேம்ஸ் இந்தியா பொது மேலாளர் அனீஷ் அரவிந்த் பேசுகையில் ‘பியூபிஜி மொபைல் கேம்பஸ் சாம்பியன்ஷிப் 2018 இந்தியாவில் மிகப் பெரிய இ-ஸ்போர்ட்ஸ் இகோ சிஸ்டத்தை உருவாக்கும் டென்செண்டின் முனைவுகளைப் பிரதிபலிக்கிறது.  இந்தியாவில் முதல் முறையாக இ-ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளோம்.அதிக எண்ணிக்கையில் கேம்பஸ்களை இப்போட்டிகளில் பங்கேற்க வைத்ததும் மகிழ்ச்சி தருகிறது.  இந்தியாவில் பியுபிஜி மொபைலுக்குக் கிடைத்த அபரிமிதமான வரவேற்பு மகிழ்ச்சி தருகிறது. எங்கள் ரசிகர்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு இந்தச் சாம்பியன்ஷிப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம்.  இந்தியாவில் பியூபிஜி மொபைலை அனைவரும் விரும்பும் விளையாட்டாக மேம்படுத்த நாங்கள் எடுக்கவிருக்கும் பல்வேறு முனைவுகளில் இது தொடக்கமாகும்’ என்றார். 

சாம்பியன்ஷிப் குறித்த விவரங்களையும் அனைத்து சமூக ஊடகங்களிலும் விளம்பரப்படுத்தப்படுவதன் மூலம் நாடு முழுவதுமுள்ள இ-ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள் கண்டு ரசிக்கலாம். இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் 4 நபர்கள் அடங்கிய குழு போட்டிகளில் பங்கேற்கலாம்.  அரை இறுதிச் சுற்றை உள்ளடக்கிய நான்கு நாக்-அவுட் சுற்றுகள் கிராண்ட் ஃபினாலே கோப்பையைக் கைப்பற்ற இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் 20 குழுக்களைக் குறைப்பட்டியலிடும்.  பதிவுகள் www.pubgmobile.in அதிகாரப்பூர்வ வலைதளத்தில் செப்டம்பர் 23 முதல் தொடங்கும். 

கிராண்ட் ஃபினாலே இறுதிச் சுற்றுப் போட்டிகளில் வழங்கப்படும் கீழ்க்காணும் சிறப்பு விருதுகள்:-

எம்விபி – அதிகபட்ச எம்விபி விருதுகளுடன் ஓவரால் பெஸ்ட் பிளேயர்
தி எக்ஸிக்யூஷனர் – அதிகபட்ச ஒட்டு மொத்த கில்ஸ்களுக்கான விருது
தி மெடிக் – அதிகபட்ச ரிவைவ்ஸுக்கான விருது
தி ரிடீமர் – அதிக மதிப்பில் ரெஸ்டோரான ஹெல்த்துக்குப் பிளேயருக்கான விருது 
தி ராம்பேஜ் ஃப்ரீக் – ஒற்றை லாபியில் அதிகபட்ச கில்ஸ்களுக்கான விருது
தி லோன் ரேஞ்சர் – விளையாட்டில் அதிகபட்ச நேரம் சர்வைவ் செய்ததற்கான விருது

எஃப் வரிசை சமீபத்திய அறிமுகங்களாக – 6.3 இன்ச் பெஜெல் இல்லாத, 1080*2340 ரெசொல்யூஷன் மற்றும் சூப்பர் ஹை ஸ்க்ரீன் – டு – பாடி 90.8% வாட்டர் ட்ராப் ஸ்க்ரீன் விகிதம் அதிகபட்ச கில்ஸ்களைப் பெறவும் துல்லியமான காட்சிகளுக்கும் உததரவாதம் அளிக்கும்.  மேற்புறம் சிறு ட்ராப்லெட்டைத் தவிர எஃப் 9 ப்ரோவின் முழத் திரையிலும் காட்சி தெரியும்.  விளையாடுபவர் அடுத்த நிலைக்குச் செல்வதற்கு இடையிடையே கைபேசியை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமின்றி ஏஐ பேட்டரி மேலாண்மை உதவும். மேலும் ஓபோ பிரத்யேகமாக உருவாக்கிய விஓஓசி ஃப்ளாஷ் சார்ஜ் குறைந்த வோல்டேஜ் சார்ஜிங்க் தொழில்நுட்பம் வழக்கமான 5வி / 1ஏ சார்ஜிங்கை விடவும் நான்கு மடங்கு வேகமாக சார்ஜ் செய்யும். 

ஹோம் க்ரெடிட், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ரிலையன்ஸ் ஆகியவற்றுடன் ஓபோ ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் ஜியோவில் 3.2 டிபி தரவைப் பெற மாதம் ரூ 1599 / ரூ 1799 மாதாந்திர தவணை முறையில் ஓபோ எஃப் 9 ப்ரோ கைபேசியை வாடிக்கையாளர்கள் வாங்கி மகிழலாம்.