தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு K.V. ராம மூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு K.V. ராம மூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு K.V. ராம மூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு K.V. ராம மூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல்  வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழாவை மிக சிறப்பாக தூத்துக்குடியில் உள்ள AVM கமலவேல் மஹாலில் வைத்து 11.11.2021 அன்று கொண்டாடப்பட்டது. இந்த நிறுவனர் தின விழாவிற்கு திரு கோபால் ஸ்ரீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்

நிறுவனர் தின விழாவில் ஒரு பகுதியாக வங்கி பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்தியது வங்கியின் நிறுவனங்களுக்கு வங்கியின் தலைமை அலுவலகத்தில் மரியாதையை செய்யப்பட்டது
1)    நிறுவனர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது
2)    வங்கியின் 100வது E-lobbyயை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி T.சாருமதி IAS அவர்கள் துவக்கி வைத்தார் 
3)    இரத்த தான மற்றும் மருத்துவ முகாம் மூலமாக 60 unit இரத்தம் சேகரிக்கப்பட்டது
4)    ஸ்ரீ லக்ஷ்மி மஹாலில் வைத்து கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன் அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு செந்தில்ராஜ் IAS அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தொகைக்கான கடிதங்களை வழங்கினார்கள். திரு. சூரியராஜ், பொது மேலாளர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திரு. K.விஜயன் துணை பொது மேலாளர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இவ்வாறான கடன் வழங்கும் முகாம் வங்கியில் உள்ள அணைத்து 12 மண்டலங்களிலும் நடைபெற்றது. தூத்துக்குடி முகாமில் 200 பயனாளிகளுக்கு `103 கோடி கடன் உதவி தொகை வழங்கப்பட்டது.
5)    AVM கமலவேல் மஹாலில் வைத்து நூற்றாண்டு நிறுவனர் தின விழா வின் தொடக்க நிகழ்ச்சியாக திரு. ராஜேஷ் வைத்யாவின் இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.    
6)    நிறுவனர் குடும்ப உறுப்பினர்கள் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு ராமமூர்த்தி, அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.
7)    திரு. சூரியராஜ், பொது மேலாளர் அவர்கள் வரவேற்புரை வழங்கியதை தொடர்ந்து திரு. சிதம்பரநாதன், துணைத் தலைவர் சிறப்பு விருந்தினரை பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார்.
8)    வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு ராமமூர்த்தி, அவர்கள் சிறப்பு விருந்தினர் திரு கோபால் ஸ்ரீனிவாசன் அவர்களை கௌரவித்து சிறப்புரையாற்றினார்.
9)    வங்கியின் முன்னாள் தலைவர் திரு S. அண்ணாமலை அவர்கள் மற்றும் வங்கியின் முன்னாள் இயக்குனர் திரு C.S. ராஜேந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்
10)    வங்கியின் சமூகப் பொறுப்பு நிகழ்வுகள் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது
11)    100 ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக வங்கியில் பல்வேறு 100 நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டது
a)    முன்களப்பணியாளர்கள் 100 நபர்களுக்கு நாடுமுழுவதும் மரியாதையை செய்யப்பட்டது இதில் 5 நபர்களுக்கு மட்டும் விழா மேடையில் கௌரவம் செய்யப்பட்டது
b)    கோவிட் 100% தடுப்பூசி இலக்கை அடையும் விதமாக 161 கிராமங்களில் 100% மக்களுக்கு முழுவதுமாக தடுப்பூசி வழங்கப்பட்டது. மொத்தமாக 11,726 நபர்கள் பயனடைந்தனர்.  
c)    100 தனி நபர் பயனாளிகளுக்கு இந்தியா முழுவதுமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதன் ஒரு பகுதியாக இந்த விழாவிலேயே வழங்கப்பட்டது  
d)    100 வது கிளையாக சாத்தூர் கிளைக்கு ISO 9001: 2015 சான்றிதழ் இந்த நன்னாளில் பெறப்பட்டது
e)    முன்களப்பணியாளர்களான தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரொக்க உதவி 4 நபரைகளுக்கு வழங்கப்பட்டது  
f)    சிறப்பு விருந்தினர் வங்கியின் மெய்நிகர் அருங்காட்சியகத்தை துவங்கி வைத்தார்  
g)    பல்வேறு தரபட்ட போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இந்தியா முழுவதுமாக நடத்தப்பட்டது இதன் மூலமாக ஒவ்வொரு போட்டியிலும் மூவர் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கான சிறப்பு பரிசு வழங்கப்பட்டது
12)    சிறப்பு விருந்தினர் திரு கோபால் ஸ்ரீனிவாசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து திரு இன்பமணி, பொது மேலாளர் அவர்கள் நன்றியுரை வழங்கினார். வங்கியின் நூற்றாண்டு நிறுவனர் தின விழா மிகச்சிறப்பாக நிறைவு பெற்றது.
இவ்விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு ராமமூர்த்தி அவர்கள், இயக்குனர்கள் குழுவினர், துணைத் தலைவர், பொது மேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி, துணை பொது மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் வங்கி நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.