மலேகான் குண்டு வெடிப்பு: சாத்வி பிரக்யாவிற்கு ஜாமீன்

மலேகான் குண்டு வெடிப்பு: சாத்வி பிரக்யாவிற்கு ஜாமீன்
Malegoan blast Sadhvi Pragya gets bail

மும்பை: மும்பையிருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதன்பிறகு இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகமை கடந்த ஆண்டு சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தது, இதனையடுத்து சாத்வி தனக்கு ஜாமீன் வழங்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டை கைவிட்டது குறித்து கேள்வியும் எழுப்பியது. இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சாத்வி பிரக்யா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம் சாத்வி பிரக்யாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது, எனினும் லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித்துக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்துள்ளது.

Malegoan blast Sadhvi Pragya gets bail