எஸ்ஆர்எம் உயர் கல்வி நிறுவனத்துக்கு மகரிஷி வித்யாமந்திர் மாணவர்கள் வருகை

எஸ்ஆர்எம் உயர் கல்வி நிறுவனத்துக்கு மகரிஷி வித்யாமந்திர் மாணவர்கள் வருகை
எஸ்ஆர்எம் உயர் கல்வி நிறுவனத்துக்கு மகரிஷி வித்யாமந்திர் மாணவர்கள் வருகை
எஸ்ஆர்எம் உயர் கல்வி நிறுவனத்துக்கு மகரிஷி வித்யாமந்திர் மாணவர்கள் வருகை
எஸ்ஆர்எம் உயர் கல்வி நிறுவனத்துக்கு மகரிஷி வித்யாமந்திர் மாணவர்கள் வருகை
எஸ்ஆர்எம் உயர் கல்வி நிறுவனத்துக்கு மகரிஷி வித்யாமந்திர் மாணவர்கள் வருகை

காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் உயர் கல்வி நிறுவனத்துக்கு மகரிஷி வித்யாமந்திர் மாணவர்கள் வருகை நிறுவனத்தின் செயல்பாடுகள் நேரில் அறிந்தனர்

காட்டாங்கொளத்தூர் செப் 5: காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை மகரிஷி வித்யா மந்திர் மாணவ மாணவியர் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தந்து நிறுவனத்தில் உள்ள அறிவியல் ஆய்வகங்கள், ஆராய்ச்சி மையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பல் மருத்துவ கல்லூரி உள்ளிட்டவைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்( SRM Institute of Science and Technology),உலக தரத்திலான உயர்கல்வி வழங்கி வருவதுடன் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் வகையில் ஆராய்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை அளித்து அதற்காக ஏராளமான நிதி செலவிட்டு வருகிறது. மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி நிறுவனத்தில் உள்ள அறிவியல் ஆய்வகங்களில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது.

பள்ளி மாணவ மாணவியர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள அறிவியல் ஆய்வகங்கள் ஆராய்ச்சி மையங்கள் செயல்பாடு அவற்றில் உள்ள நவீன சாதனங்கள் பற்றியும் மாணவ மாணவியர் வருங்காலத்தில் உயர்கல்வி சம்மந்தமாக அறிந்து கொள்ளும் வகையில் அவர்களை நிறுவனத்திற்கு நேரில் வரவைத்து விளக்கும் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை மகரிஷி வித்யாமந்திர் சீனியர் செகண்டரி பள்ளியை +1,+2 மாணவ மாணவியர் 61 பேர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தந்தனர் .அவர்கள் நிறுவனத்தில் உள்ள உயிரி பொறியியல் பள்ளி,உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஜெனிடிக்ஸ் பள்ளி ஆய்வகங்கள், எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பல் மருத்துவ கல்லூரி, நானோ டெக்னாலஜி ஆராய்ச்சி மையம்,  ரொபாடிக் ஆய்வகம்,ஆட்டோ மொபைல் ஒர்க் ஷாப், மெக்கானிக்கல் ஒர்க் ஷாப் உள்ளிட்ட பல்வேறு ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களுக்கு  சென்று அதன் செயல்பாடுகளை நேரில் கேட்டறிந்தனர்.

இந்த வருகை மகரிஷி வித்யாமந்திர் மாணவ மாணவியருக்கு உயர்கல்வி சம்மந்தமான ஆர்வத்தையும், அறிவியல் அறிவு வளர்ச்சியையும் உருவாக்கும் விதமாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.