பஸ் ஸ்டிரைக்கிற்கு விதித்த தடையை நீக்க முடியாது: சென்னை உயர்நீத

பஸ் ஸ்டிரைக்கிற்கு விதித்த தடையை நீக்க முடியாது: சென்னை உயர்நீத
Madras High Court refused to remove ban on Bus Strike

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோத போராட்டம் என அறிவித்ததுடன், போராட்டத்திற்கும் தடை விதித்தது. மேலும் தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ஆனாலும், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இந்நிலையில், பஸ் ஸ்டிரைக்கிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிற்சங்கங்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பதில் மனுவின் அம்சங்கள் மற்றும் அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த உயர்நீதிமன்றம், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அனைத்து நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், ஸ்டிரைக்கினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியது.

ஸ்டிரைக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. 14 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்காமல் போராட்டம் நடத்துவதாகவும், முன்னறிவிப்பு இல்லாத ஸ்டிரைக்கை ஏற்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Madras High Court refused to remove ban on Bus Strike