உள்ளாட்சி - உரிமைக்குரல்”  - தேர்தல் பரப்புரைப் பயணம், நாளை துவக்கம்! 

உள்ளாட்சி - உரிமைக்குரல்”  - தேர்தல் பரப்புரைப் பயணம், நாளை துவக்கம்! 
Local Government - Voice of Rights ”- Election campaign tour, starting tomorrow!
உள்ளாட்சி - உரிமைக்குரல்”  - தேர்தல் பரப்புரைப் பயணம், நாளை துவக்கம்! 

“உள்ளாட்சி - உரிமைக்குரல்” 
- தேர்தல் பரப்புரைப் பயணம், நாளை துவக்கம்! 

தலைவர் கமல் ஹாசன்  காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து  பரப்புரையைத்  துவங்குகிறார்!

வணக்கம், 
வலுவான உள்ளாட்சிகளே முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் முக்கியக் கொள்கைகளுள் ஒன்று.
இந்த அடிப்படையில் உள்ளாட்சிகளின் மேம்பாட்டிற்காக கருத்தியல் ரீதியிலும், களத்திலும் மய்யம் தொடர்ந்து செயல்பட்டுவந்திருக்கிறது. நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக  உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது என்பதை தலைவர் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளார். மாற்றத்தின் பிரதிநிதிகளாக, மய்ய வேட்பாளர்கள் தமிழகமெங்கும் போட்டியிடுகிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் களத்தில் மய்யத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும்,  உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக உரத்த குரல்கொடுப்பதற்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் “உள்ளாட்சி - உரிமைக்குரல்”  முதற்கட்ட பரப்புரைப் பயணத்தை, நாளை (27.09.21) காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரிலிருந்து துவங்குகிறார்.
30.09.21 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தைத் தொடர்கிறார்.

ஊடகப்பிரிவு
மக்கள் நீதி மய்யம்