இந்த அரசு வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை பூர்த்தி செய்யும்

இந்த அரசு வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை பூர்த்தி செய்யும்
Law and order situation in Tamilnadu is good Natarajan

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:

தற்போது உள்ள தமிழக அரசு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகுத்த வழியில் தான் பயணிக்கிறது. தற்பொழுது எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் அனைத்து அமைச்சர்களும் கலந்து பேசித்தான் எடுக்கப்படுகின்றன.

அரசு இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். நீண்டகாலமாக ஒரே மாவட்டத்தில் இருக்கும் கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளை மாற்ற வேண்டும்.

தமிழக அரசு தற்பொழுது நிதி நெருக்கடியில் இருக்கிறது. மத்திய அரசும் தன் பங்கிற்கு மானியங்கள் எதுவும் வழங்குவதில்லை அத்துடன் நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூடும் உத்தரவினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறப்பான நிர்வாகம் இருப்பதால் தான் சட்டம்-ஒழுங்கு பிரச்னையில்லை, தமிழக அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர். இந்த அரசு வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளை பூர்த்தி செய்யும் என்று நான் நம்புகிறேன்.

என்று நடராஜன் கூறினார்.

Law and order situation in Tamilnadu is good Natarajan