கத்தி காட்டி பணம் பறித்தவர் கைது

கத்தி காட்டி பணம் பறித்தவர் கைது
கத்தி காட்டி பணம் பறித்தவர் கைது

கோவை நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் பரமேஷ்வரன் (44). தள்ளுவண்டியில் பெல்ட், மணிபர்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த வாலிபர் ஒருவர் பெல்ட் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் பறித்து கொண்டு தப்பிக்க முயன்றார். பரமேஷ்வரன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது சவுரிபாளையம் இந்திராநகரை சேர்ந்த ஜோதிபாசு (25) என தெரியவந்தது. போலீசார் இவரை கைது செய்தனர்.