நோக்கியாவின் நான்கு புதிய ஸ்மார்ட் போன்கள்

நோக்கியாவின் நான்கு புதிய ஸ்மார்ட் போன்கள்

சென்னை, இந்தியா: நோக்கியா போன்களின் தாய்வீடாகத் திகழும் எச்எம்டி க்ளோபல் நிறுவனம் நோக்கியா 1, நியூ நோக்கியா 6, நோக்கியா 7 ப்ளஸ், நோக்கியா 8 ஸிரோக்கோ ஆகிய நான்கு செல்போன்களை இன்று காட்சிப்படுத்தின. புதிய ஆன்ட்ராய்டு செயல்பாட்டில் விருது பெற்ற நோக்கியா நிறுவனத்தின் இந்தப் புதிய ஸ்மார்ட்போன்கள் கடந்த பிப்ரவரியில் நடந்த சர்வதேச மொபைல் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நான்கு புதிய போன்களை அறிமுகப்படுத்துவதுடன், நோக்கியாவின் அனைத்து தயாரிப்புகளும், உபகருவிகளும் நாட்டில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஆன்-லைன் ஷாப்பிங் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

நோக்கியா போனிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து வகையான அம்சங்களும் புதிய போன்களில் இடம்பெற்றுள்ளன. நீண்ட கால செயல்திறன் மற்றும் தரத்தில் உறுதித்தன்மை போன்ற அம்சங்கள் நோக்கியா போன்களில் உள்ளன. அவற்றின் டிசைன்கள் மற்றும் உப பொருள்களால் இவை புதிய மைல்கல்களை எட்டி வருகின்றன.

நோக்கியாவின் ஒவ்வொரு போன்களிலும் மாதாந்திர பாதுகாப்பு அப்-டேட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், போனில் தேவையில்லாத செயல்பாடுகளால் உங்களது பேட்டரியின் காலம் வீணாவது தடுக்கப்படும். நீண்ட நேரம் உங்களுடைய புதிய நோக்கியா போனை பயன்படுத்தி மகிழலாம்.

இதுகுறித்து, எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதி பொது மேலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் கூறியதாவது:-

2017-ஆம் ஆண்டு என்பது எங்களுக்கு புதிய கருவிகளின் ஆண்டாகத் திகழ்ந்தது. நாட்டில் மிகப்பெரிய அளவுக்கு வணிகச் செயல்பாடுகளை ஏற்படுத்தியதுடன், பல்வேறு கருவிகளையும் அறிமுகப்படுத்தினோம். அவை வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தன. இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த கட்டத்துக்கு நாங்கள் அடியெடுத்து வைத்துள்ளோம். நான்கு புதிய ஆன்ட்ராய்டு செல்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். நாட்டில் நோக்கியாவின் செயல்பாடுகளை தொடர்ந்து வலுப்படுத்திடுவோம். மேலும், நோக்கியா போன்களுக்கான தனித்துவமான ஆன்-லைன் ஷாப்பிங் வசதியை அறிவிப்பதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். நோக்கியா போன்கள் மற்றும் உபகருவிகளின் விற்பனைக்காக புதிய கடைகளையும், ஆன்-லைன் வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதிலும் நாங்கள் மனப்பூர்வமாக உறுதி பூண்டுள்ளோம் என்றார்.

நோக்கியா 1: முழுமையான நோக்கியா ஸ்மார்ட் போன் அனுபவத்தைத் தரும். அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏற்றது.

நோக்கியா 1 செல்போன் மிகவும் இலகுவாகவும், பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையிலும் இருக்கும். கூகுள் ப்ளே ஸ்டோரை முழுமையாக பயன்படுத்தலாம். அதிலிருந்து உங்களுக்கு பிடித்தமான அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாக, வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்றவற்றை பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த போன் நாம் விரும்பிய வண்ணங்களில் கிடைக்கிறது. போனின் கவரை நாம் விரும்பிய வண்ணத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு கவரும் போனின் அசல் கவரைப் போன்றே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு-சலுகைகள் என்ன?

சிவப்பு மற்றும் அடர் நீல நிறத்தில் நோக்கியா 1 போன்கள் கிடைக்கின்றன. இதன் விலை ரூ.5,499 ஆகும். இவற்றுக்கான கவர்கள் தனியாக கிடைக்கும். அதன் விலை ரூ.450. நோக்கியா 1 போனைப் பெறும் போது, ஜியோ நிறுவனத்திடம் இருந்து ரூ.2,200 அளவுக்கு கேஷ்-பேக் சலுகையைப் பெறலாம். இதனால், நோக்கியா 1 போனின் விலை ரூ.3,299-ஆகக் குறைத்து வாங்கலாம். மேலும் 60 ஜிபி இணையதள டேட்டாவும் கூடுதலாகப் பெறலாம். இந்தச் சலுகை அனைத்து புதிய மற்றும் பழைய ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.

அனைத்து நோக்கியா 1 போன்களுக்கும் 12 மாத விபத்து சேதார காப்பீட்டு வசதி உள்ளது. மேலும், இதனைக் கொண்டு முதல் முறையாக ரெட் பஸ்ஸில் முன்பதிவு செய்யும் போது 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.

நியூ நோக்கியா 6: எங்களது விருது பெற்ற போன்:

நியூ நோக்கியா 6 செல்போன் மிகவும் சக்திவாய்ந்த செயல்திறன் கொண்டது. பல புதிய சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முந்தைய விருது பெற்ற போனைக்க காட்டிலும் 60 சதவீதம் வேகத்துடன் செயல்படும் தன்மை கொண்டது. டூயல் சைட், ஷிஸிஸ் ஆப்டிக்ஸ், விரைவான சார்ஜ் வசதி, உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும் பாதுகாப்பான ஆன்ட்ராய்டு போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நியூ நோக்கியா 6 செல்போன் 6 ஆயிரம் சீரியஸ் அலுமினியம் கொண்டும், 2.5டி டிஸ்ப்ளே வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, கொரில்லா க்ளாஸ் கொண்டு இருப்பதால் சேதாரத்தில் இருந்து காக்கும் தன்மை கொண்டது. இதன் செயல்பாடுகள் விரைவாக இருப்பதுடன், இயக்குவதற்கு மிகவும் இலகுவாக இருக்கும். மேலும், இதன் பேட்டரி நீண்ட நேரத்துக்கு செல்போனை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு-சிறப்பு அம்சம் என்ன:

பிளாக்-காப்பர் மற்றும் வெள்ளை-காப்பர் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. சங்கீதா, பூர்விகா, பிக்சி, க்ரோமா, ரிலையன்ஸ் போன்ற முன்னணி