மே 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் தேர்தல்

மே 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் தேர்தல்
Karnataka assembly elections to be held on May 12

புது டெல்லி: கர்நாடக மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் மே 28ம் தேதியுடன் நிறைவடைவதால் தேர்தல் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு மே மாதம் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏப்ரல் 24ம் தேதி கடைசி நாள். மே 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். 15-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் 28 லட்சம் மட்டுமே தேர்தல் செலவு செய்ய அனுமதிக்கப்படும். வேட்பாளர்களின் செலவினத்தை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தேர்தல் விதிமுறைகளை மீறாமல் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Karnataka assembly elections to be held on May 12