கர்நாடக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்

கர்நாடக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்
Karnataka CM Kumaraswamy presents 2018-2019 budget

பெங்களூர்: கர்நாடக முதல்வராக பதவியேற்ற குமாரசாமி முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய விவரம் வருமாறு:-

* கர்நாடக மாநிலத்தில் ரூ.34,000 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

* பெட்ரோல் மீதான வரி விகிதம் தற்போது 30% லிருந்து 32% ஆகவும், டீசல் 19% ல் இருந்து 21% ஆகவும் உயர்த்தப்படுகிறது இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .1.14 , டீசல் லிட்டருக்கு ரூ 1.12 அதிகரிக்கும்.

* இஸ்ரேல் பாணியில் வறண்ட நிலத்தில் பாசனம், விளைச்சலை ஊக்கப்படுத்த, வறண்ட பகுதிகளான கோலார், சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.150 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.

* பெங்களூருக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், மேகதாது பகுதியில் காவிரிக்கு குறுக்கே அணை கட்டப்படும். மத்திய அரசு அனுமதியளித்ததும், அணை கட்டும் பணிகள் துவங்கப்படும்.

* 2,18,488 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்துள்ளார்.

Karnataka CM Kumaraswamy presents 2018-2019 budget