கந்தசாமி - இந்த பெயரைக் கேட்டால் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிர அரசியல்வாதிகள் நடுங்குவார்கள்.

கந்தசாமி - இந்த பெயரைக் கேட்டால் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிர அரசியல்வாதிகள் நடுங்குவார்கள்.
கந்தசாமி - இந்த பெயரைக் கேட்டால் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிர அரசியல்வாதிகள் நடுங்குவார்கள்.

கந்தசாமி - இந்த பெயரைக் கேட்டால் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிர அரசியல்வாதிகள் நடுங்குவார்கள். ஏனெனில் அவரின் செய்கை அப்படி. தமிழக பிரிவைச் சேர்ந்த கந்தசாமி ஐபிஎஸ், ஆரம்பத்தில் சிபிஐயில் பணியாற்றி வந்தவர். இப்போதும் சிபிஐ அதிகாரிகளிடம் கந்தசாமி என பெயர் சொன்னால், மாணிக் பாட்ஷா பெயரைக் கேட்டதும் ஒரு நடுக்கத்தைக் காட்டுவார்களே, அப்படி நடுங்குவார்கள். கந்தசாமியா? அவரா? என புருவங்கள் உயரும். காரணம் அவரது நுண்ணறிவும், வழக்குகளை கையாளும் திறனும்தான். முடிக்க முடியாத, விஐபிக்கள் தொடர்பு வழக்குகளை விசாரிக்க எந்த அதிகாரியை போடலாம் என சிபிஐ இயக்குநர்கள் யோசிக்கத் தேவையில்லை, ஏனெனில் அவர்களின் முதல் சாய்ஸ் கந்தசாமியாகத்தான் இருந்தார். 
சிபிஐ சிறப்பு புலனாய்வு பிரிவில் தலைவராகவும், சிபிஐ மும்பை பிரிவில் இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார் கந்தசாமி. திடீரென உச்சநீதிமன்றத்தில் இருந்து ஒரு உத்தரவு. சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை மும்பைக்கு மாற்றுகிறோம், சிபிஐயிடம் ஒப்படைக்கிறோம், வழக்கு நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவு பறந்தது. 
அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேரிலும் கடுமையான குற்றச்சாட்டுகள் இருந்தன. அதிகாரிகள் பலரும் இந்த வழக்கு நம்மிடம் வரக்கூடாது என எண்ணிக்கொண்டிருக்க, விசாரணையை கந்தசாமி நடத்துவார் என உத்தரவு வந்தது. அடுத்தடுத்து நடந்தது எல்லாம் அதிரடி ரகம்தான். அமித்ஷாவை விசாரணைக்கு வரச்சொன்னார் கந்தசாமி, பாஜகவினர் கொதித்தனர். ஆனால் அவர் கண்டுகொள்ளவேயில்லை. மீண்டும் சம்மன். விசாரணை சூடுபிடித்தது. மீடியாக்கள் கந்தசாமி ஐபிஎஸ் பெயரை உச்சரிக்க ஆரம்பித்தன. அப்போது அடுத்தடுத்து நடந்தது யாரும் எதிர்பார்க்காதது. 
குற்றச்சாட்டுகள் தொடர்பாக சில முக்கிய தகவல்கள் கந்தசாமிக்கு கிடைத்தது. இன்னும் காத்திருக்க முடியாது, நீதிமன்றம் சென்றார் , வாரண்ட் பெற்றார். அமித்ஷாவை கைது செய்தார். சிபிஐ அலுவலகம் கல்வீசப்பட்டது. ஆனால் விடிய விடிய விசாரணையை நடத்திக் கொண்டிருந்தார் கந்தசாமி. இந்த சம்பவம் பற்றி பேசிய கந்தசாமியின் ஜூனியர் அமிதாப் தாகூர், சொராபுதீன் என்கவுண்டர் நடந்து எங்களிடம் வழக்கு வந்தபோது 6 ஆண்டுகள் ஆகியிருந்தது. என்ன செய்யப் போகிறார் என நாங்கள் தவித்துக்கொண்டிருந்தபோது 5 ஆண்டுகளுக்கு முந்தைய சில ஆதாரங்களை கண்டுபிடித்துக்கொண்டு வந்து அமித்ஷாவை அரெஸ்ட் பண்ணாரு” என சொன்னார். 
ஆனால் திடீரென கந்தசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஓய்வுக்கு அனுப்பப்பட்டார். நலமானதும் மீண்டும் விசாரணையை தொடங்குவார் என சொன்னது சிபிஐ. அதன்பின்னர் அவரை தமிழ்நாட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது சிபிஐ. ஏன் என கேட்டால் அதுதான் உத்தரவு என்றார்கள். இப்போதுவரையிலும் அது மர்மம்தான்.
இந்நிலையில்தான் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக கந்தசாமியை நியமித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். கந்தசாமியின் ஏரியா ஃபைனான்ஷியல் கிரைம். அதாவது பணம் சார்ந்த குற்றங்களை டீல் செய்வதுதான். தேர்தலுக்கு முன்பு ஆளுநரை சந்தித்த திமுக ஒரு ஊழல் பட்டியலை கொடுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். தூசு தட்டப்படும் அந்த பட்டியலில் ஆரம்ப விசாரணைக்கு நீதிமன்றம் ஓகே சொல்லியிருக்கிறது. அவை அனைத்துமே கந்தசாமியின் ஃபேவரைட்டான ஃபினான்சியல் கிரைம் வகைகள்தான். முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கம்போல தனது நுண்ணறிவை தூண்டி விட்டிருக்கிறார் கந்தசாமி. மாட்டப் போகும் நபர்கள் யார் என்பது விரைவில் தெரியும்.