வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

 வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தது. 
 
இந்நிலையில், அடுத்த வாரம் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ள காரணத்தினாலும், கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளிலும் போராட்டம் மூலம் பாதிப்பு ஏற்படும் என்ற காரணங்களை வலியுறுத்தி வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் போராட்டத்தை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தினர், எனவே நாளை முதல் தொடங்குவதாக இருந்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் தெரிவித்துள்ளனர்.