SRM - சர்வதேச இளைஞர் தினம்

SRM - சர்வதேச இளைஞர் தினம்
International Youth day celebrations from SRM University

SRM பல் மருத்துவக் கல்லூரி சர்வதேச இளைஞர் தினத்தை கொண்டாடியது. பல் மருத்துவ கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் இந்நிகழ்வினை காட்டாங்குளத்தூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர்.

அவ்விழாவில் SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் தொடக்கி வைத்தார் சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் இன்று நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் " ஒரு மருத்துவராக மட்டும் இல்லாமல் நோயாளிகளை தங்கள் விருந்தினராக உறவினர்களாக பார்க்க வேண்டும் அதுதான் வெற்றிகரமான மருத்துவராய் உங்களை ஆக்கும். அது தான் உண்மையான மகிழ்ச்சியையும் அமைதுயையும் தரும் என்றார் .விழாவில் 72 வது சுதந்திர தினத்தை நினைவு கூரும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் சேதுராமன் கூறுகையில் மரங்கள் வளர்ப்பதில் இளைஞர் ஆர்வம் காட்டிட வேண்டும் என்றும் "ஒரு மரம் வெட்டினால், நீங்கள் ஒரு உயிரைக் கொல்வீர்கள். நீங்கள் ஒரு மரத்தை காப்பாற்றினால், நீங்கள் ஒரு உயிரை காப்பாற்றுகிறீர்கள்; நீங்கள் ஒரு மரத்தை நடவு செய்தால், நீங்கள் ஒரு புது வாழ்வை உருவாக்குவீர்கள்" என்று அறிவுரைத்தார். விழாவில் பல் மருத்துவ கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

International Youth day celebrations from SRM University