சர்வதேச "கவுச்சர்" விழிப்புணர்வு தினம்

சர்வதேச "கவுச்சர்" விழிப்புணர்வு தினம்

திசு உள் செரிமான அமைப்பு சீர்குலைவால் பாதிக்கப்பட்டோர் சர்வதேச விழிப்புணர்வு தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது

சென்னை, அக். 3- சர்வதேச  கவுச்சர் (உள் செரிமான அமைப்பில் சீர்குலைவுகள்)  தினத்தை முன்னிட்டு  லைசோமால் ஸ்டோரேஜ் டிஸாடர்ஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் சார்பில் அந்த பாதிப்பு உடைய நோயாளிகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிக்கு சென்னையில் செவ்வாயன்று (அக்.3) எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திசு உள் செரிமான அமைப்பு சீர்குலைவு  (Lysosomal Storage Disorders (LSDs)) என்ற மிகவும் அரிதான மரபணு கோளாறு பாதிப்பு மற்றும் அதுதொடர்பான அறிகுறி குறித்தும் அத்தகைய பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கவும்  பொதுமக்களிடம்  விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  தமிழகத்தில் கவுச்சர்  மற்றும் இதர திசு உள் செரிமான அமைப்பு சீர்குலைவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரபல மருத்துவர்கள், குறிப்பாக டாக்டர் எஸ். சுரேஷ் (மெடிஸ்கேன் இயக்குநர்), டாக்டர் சுஜாதா ரேகா (குழந்தை மருத்துவர்) இந்த பாதிப்பு உள்ள குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளை  சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு  உரிய முறையில் கொண்டு சென்று  திறமையாக வாதாடிய  மூத்த வழக்கறிஞர் வி.ரமேஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினர்.  மாநிலத்தில் இதுபோன்ற பாதிப்பு உடைய குழந்தைகளுக்கு செரிமான மாற்று தெரப்பி சிகிச்சை அளிக்க உரிய வசதிகளை செய்து தருமாறும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறும் தமிழக அரசிடம் அவர்கள்  கோரிக்கை விடுத்தனர்.  லைசோமால் ஸ்டோரேஜ் டிஸாடர்ஸ் சொசைட்டி தலைவர் மன்ஜித்சிங்கும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

கடந்த 6 ஆண்டுகளாக இந்த பாதிப்பு உடைய குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் பிரபல  நடிகர் கார்த்தி சிவக்குமார் (கார்த்தி) இந்த குழந்தைகளின் தூதுவராக உள்ளார்.  அவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.

“ பெற்றோர்கள், பாதுகாவலர்கள், மருத்துவ நிபுணர்கள், செவிலியர்கள், சிறு மற்றும் பெரிய மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள் இடையே எல்எஸ்டி குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் இதர பிரிவினர் 2013  ஆம் ஆண்டு முதல் எல்எஸ்டிஎஸ்எஸ் பாதிப்பு உடைய 26 குழந்தைகளை மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் முயற்சிகளை தொடங்கின. ஆனால் அரசிடம் இருந்து எந்த ஒரு ஆதரவும் இதற்கு கிடைக்காத பட்சத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்து இந்த குழந்தைகளுக்கு சிகிச்சையும் ஆதரவையும் அளிப்பது அரசின் கடமை என்பதை உணர்த்தும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தமிழக அரசு மருத்துவர்கள்,  சட்ட நிபுணர்கள், கொண்ட குழுவையும் அமைக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் மரபணு கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களில்  உடனடியாக சிகிச்சையை தொடங்குமாறும் உத்தரவிட்டது’’ என்று எல்எஸ்டிஎஸ்எஸ் அமைப்பின் தலைவர் திரு. மன்ஜித்சிங் கூறினார்.

இந்த உத்தரவை அடுத்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இதற்காக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அளிக்கும் முன்பு  பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தற்போது இருக்கக்கூடிய சிகிச்சையை உடனே தொடங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது என்று நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர் ரமேஷ் கூறினார்.

திசு உள் செரிமான குறைபாடு போன்ற 50க்கும் மேற்பட்ட அரிய வகை மரபணு கோளாறுகள் உள்ளன. இதில் கவுச்சர் பொதுவாக காணப்படும் பாதிப்பு ஆகும். இந்த குறைபாடு குறித்து டாக்டர் எஸ்.சுரேஷ் கூறுகையில்,  “ கவுச்சர் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முக்கியமான  என்சைம் பற்றாக்குறையாக இருக்கும். இது அக் குழந்தைகளின் செல்களில்  கொழுப்பு அதிகாக தேங்க காரணமாக அமைந்து விடும். இதன் விளைவாக மண்ணீரல் கணிசமாக வீக்கம் அடையும்,  ஈரல் பகுதியில் அதிக கொழுப்பு சேரும். எலும்புகள்,  தசைகள் பலவீனமடைந்து வலிகளை உண்டாக்கும். இரத்த சோகை உள்ளிட்டவை ஏற்படும். இதற்காக அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருக்கும். இதனால் உடனடியாக இந்த பாதிப்பை மருத்துவர்களால் கூட கண்டுபிடிப்பது கடினமாகும். இதனால் அந்த பாதிப்பு உடைய குழந்தைகளுக்கு சிகிச்சையை தொடங்குவது தாமதமாகும். இதில் என்ன முக்கியம் என்றால் காலத்தோடு இந்த பாதிப்பை கண்டுபிடித்து உடனே சிகிச்சையை தொடங்குவது அவசியமாகும். அதன் மூலமே எதிர்காலத்தில் இந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ முடியும். எனவே  குழந்தைகளுக்கு  சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் இத்தகைய பாதிப்புகளை உரிய நேரத்தில் கண்டுபிடிப்பதிலும் சிகிச்சையை அளிப்பதிலும் விரைந்து செயல்படவேண்டும் என்று மருத்துவ சமூகம் கேட்டுக்கொள்கிறது. இந்த வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் இந்த பாதிப்பு குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட நல்ல முயற்சி’’ என்றார்.

அடையாளம் காணப்பட்ட 50 திசு உள் செரிமான குறை