இந்தோ-பிரெஞ்சு உணவு முறை பரிமாற்றம்

இந்தோ-பிரெஞ்சு உணவு முறை பரிமாற்றம்
Indo-French Culinary Exchange at SRM institute of Hotel Management

1993ல் தொடங்கப்பட்ட SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம் இத்துறையில் நாட்டின் முதன்மைக் கல்வி நிறுவனமாக விளங்குவதாகும்.

மாணவர்களுக்கு இனிமையான கல்விச் சூழலையும் உள்ளார்ந்த கற்பித்தலையும் எப்பொழுதும் வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம் மாணவர்கள் தங்கள் திறன்களை நன்கு வளர்த்துக் கொள்ளும்வகையில் பயிற்சி அளிப்பதில் சிறப்பாக வளர்ந்தோங்கிப் புகழுடன் விளங்குகிறது. இந்த நிறுவனம், சென்னை, திருச்சி, சிக்கிம் மற்றும் தில்லி ஆகிய இடங்களில் இயங்குகிறது. நவீன உள்கட்டமைப்புகள், புதுமைக் கருவிகள், திறனுறு வகுப்பறைகள், புதுவகை ஆய்வகங்கள், மேம்படுத்தப்பட்ட நூலகம் மற்றும் நிறுவனத்துடன் இணைந்த நட்சத்திர உணவகம் ஆகியவை இந்நிறுவனத்தில் உள்ளன. இந்த வசதிகள் மாணவர்கள் கைமேல் பயனாகப் பயிற்சிபெற்றுத் தங்கள் திறமையையும் அறிவையும் வளர்த்துக் கொள்ளப் பெரிதும் உதவும் வகையில் செய்யப்பட்டுள்ளன.

SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் விருந்தோம்பல் கல்வியானது கடந்த 25 வருடங்களாக பல வெற்றிகளையும் சாதனைகளையும் புரிந்துவருகிறது. இந்நிறுவனத்தில் நடத்தப்படும் பணியிடைப்பயிற்சி, செயல்முறை விளக்கம் மற்றும் சமையற்கலை பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம் இங்கு பயிலும் மாணவர்கள், தங்கள் திறமையை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரெஞ்சு நாட்டின் JACQUE COEUR SCHOOL இன் ஆசிரியர்களையும் மாணவர்களையும் வரவேற்று இரு நாட்டின் சமையற்கலை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்தை 09.12.2017 அன்று SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் நிகழ்த்தியது.

இவ்விழாவில், இந்திய சமையற்கலை செயல் விளக்கம், பிரெஞ்சு பேஸ்ட்ரி செயல் விளக்கம் மற்றும் flambé செயல் விளக்கம் ஆகிய மூன்று செயல்பாட்டின் மூலம் இருநாட்டு சமையற்கலை செய்முறை பரிமாற்றம் நடைபெற்றது. உணவு மற்றும் பரிமாற்றத் துறையை மெருகேற்றும் வகையில் பிரான்ஸ் மாணவர்கள் தங்களின் mocktail எனப்படும் குளிர்பான வகைகளின் செயல்பாட்டினை SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் மாணவர்களுக்கு செயல்முறை மூலம் விளக்கமளித்தார்கள்.

இந்திய சமையற்கலையை செயல்படுத்தும் விதமாக, SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் சமையற்கலை வல்லுனர்கள் பஞ்சாபின் சமோசா, கர்நாடகாவின் செமோலினா மீன் வறுவல் ,லக்னோவின் சிறப்புமிக்க ஷாஹி துக்கடா மற்றும் தென் இந்திய பாயாசங்களின் வகைகளில் ஒன்றான சேமியா பாயசமும் செய்து காண்பிக்கப்பட்டது, இதற்குகேற்றவாறு, Palets aux raisins, biscuit aux amandes, flamed Banana, மற்றும் Flamed crepes எனும் pastry செயல்முறைகளை JACQUES COEUR SCHOOL, BOURGES, பிரான்ஸின் சமையல் வல்லுனர் Charles Gilles மாணவர்களை ஈடேற்றும் வகையில் செய்து காட்டினார். இவ்வாறு இரு நாட்டின் சமையற்கலை நுட்பங்களும் பரிமாற்றிக் கொள்ளப்பட்டது.

இந்தியா மற்றும் பிரெஞ்சு நாட்டு உணவுவகைகளை விருந்தினர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் தயாரித்து பரிமாறப்பட்டது. இதைத்தொடர்ந்து SRM உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மனதை கவரும் வகையில் இனிதே அரங்கேறியது. இறுதியாக கல்லூரி இயக்குனர் Dr. D Antony Ashok Kumar அவர்கள் பிரான்ஸ் பெர்கெஸ் JACQUES COEUR SCHOOL இன் ஆசிரியர்களான சமையல் வல்லுனர் Charles Gilles சையும் Bodeaux Claire ஐயும் மற்றும் மாணவர்களையும் கவுரவித்து விழா இனிதே முடிவடைந்தது.

Indo-French Culinary Exchange at SRM institute of Hotel Management