லோக்பால் அமைப்பின் முதல் தலைவர் பதவியேற்பு

லோக்பால் அமைப்பின் முதல் தலைவர் பதவியேற்பு

புது டெல்லி: பிரதமர், மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு லோக்பால் என்ற அதிகாரம் பொருந்திய அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், நாட்டின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திர கோஸ்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் மேலும் 8 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பி.கே.மொஹந்தி, அபிலாஷா குமாரி, ஏ.கே.திரிபாதி மற்றும் தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங்,  ஐ.பி. கவுதம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.