சென்னையில் பாரத தேசத்தின் முதல் சி. எஸ்.ஆர்(CSR) மாநாடு WEMAAA-2022

சென்னையில் பாரத தேசத்தின் முதல் சி. எஸ்.ஆர்(CSR) மாநாடு WEMAAA-2022
சென்னையில் பாரத தேசத்தின் முதல் சி. எஸ்.ஆர்(CSR) மாநாடு WEMAAA-2022
சென்னையில் பாரத தேசத்தின் முதல் சி. எஸ்.ஆர்(CSR) மாநாடு WEMAAA-2022

சென்னையில் பாரத தேசத்தின் முதல் சி. எஸ்.ஆர்(CSR) மாநாடு WEMAAA-2022

            உலகத் தரம் வாய்ந்த இந்தியாவின் முதல் சி.எஸ்.ஆர்(CSR) மாநாடு WEMAAA-2022 ஆகும். இது முக்கியமாக 12000 ஆண்டுகளுக்கு முன் லெமோரியா கண்டத்தின் பழைமை வாய்ந்த சூத்திரங்களை உள்ளடக்கிய அகத்தியர் மாமுனி வரின் அகத்தியம் என்ற நூலின் தற்சார்பு, தேனீக்கள் , மற்றும் வண்ணத்து பூச்சிகளின் பொருளாதாரத்தை கடைப் பிடித்து இயற்கையுடன் ஒத்து வாழ்தல் அத்துடன் விஞ்ஞான ரீதியான வளர்ச்சி, எந்திரமையம், நவீனமையமாக்குதல் போன்ற தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளினால் மக்கள் நலனில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமலும், இயற்கைக்கு / சுற்றுப்புற சூழல், விவசாயத்திற்கு, மக்கள் நலனிலும் ஆரோக்கியத்திற்கு எந்த கேடுகளும் வராமல் செயல் பட அருளிய சூத்திரங்களை மறு பரிசீலனை செய்து அதை நடைமுறைப்படுத்த வைக்கும் கருத்தரங்கம்.

                இவைகளை தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில் விவசாய பெருங்குடி மக்களுக்கு,  பன்னாட்டு நிறுவனங்களுக்கு, தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு பொதுமக்களுக்கு, அரசாங்க, தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இளம் தலைமுறையினருக்கு விளக்கம் கொடுத்து அடுத்த 20 ஆண்டுகளில் பாரததேசத்தில் அனைவரும் ஒரு ங்கிணைந்து செயல் படுத்த வேண்டிய பல்வேறு வகையான திட்டங்களை நிர்ணயம் செய்யும் மாநாடு.

         இதன் மூலம் அடுத்த 1000 ஆண்டுகள் நம் எதிர்கால சந்ததியினர் மகிழ்வுடனும், நோய் நொடி இல்லாமலும், நஞ்சில்லா உணவு உற்பத்தியை உறுதி செய்யவும், வளம் குன்றா கிராமப்புற ஒருங்கிணைந்த விவசாய வளர்ச்சி யை மையப்படுத்தியும், மீண்டும் பண்டமாற்று முறையின் அவசியத்தை உணர்த்தவும், தற்சார்பு சர்குலர் பொருளாதாரத்தை  நிலைநிறுத்த, கிராமப்புற பகுதிகளில் மீண்டும் ஒற்றுமையை கொண்டு வர ஒரு மிகப்பெரிய சக்தியாக நல்ல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விழாவாக இந்த WEMAAA- 2022 விழா அமையும்.

  அது மட்டுமல்லாது பாதுகாப்பான உலக நலனில் நல்ல பலன் தரும் மாற்றத்திற்கு விவசாயிகளை, பெண்களை, கல்வியாளர்களை, மக்கள் நலனில் அக்கறை கொண்ட விஞ்ஞானிகளை, நல்ல அரசியல்வாதிகளை, ஞானம் பெற்ற பொது மக்களை, வீரியமுள்ள இளைய சமுதாயத்தை , நுகர்வோர்களை, பன்னாட்டு நிறுவனங்களை, தன்னார்வு தொண்டு நிறுவனங்களை, இளம் விஞ்ஞானி களை  வரவேற்கும் மாநாடு.

 இதை சங்கமாஸ் இன்டர் நேஷனல் (SANGAMAAS INTERNATIONAL) மற்றும் இந்திய இயற்கை விவசாயிகள் சங்கமும் ( IOFA) இணைந்து நடத்துகிறது. அத்துடன் இவர்களுக்கு SEEPF, SCSF நிறுவனங்களும் உதவி கரம் நீட்டியுள்ளது. இந்த மாநாட்டை பொறுப்புணர்வுடன் சிறப்பாக நடத்திட திரு சுனீஸ் எஸ். தேவன் (SUNEESH S.DEVAN) மற்றும் டாக்டர் சுப்பிரமணியன் முருகேசன் (Dr.SUBRAMANIYA MURUGESAN) சிறந்த ஏற்பாடுகளை அவர்கள் சகநண்பர்கள் உதவி மூலம் செய்து உள்ளார்கள்.

             சங்கமா இன்டர் நேஷனல் என்பது சர்வதேச அளவிலான தன்னார்வு தொண்டு நிறுவனம். ஐயோபா (IOFA)என்பது இயற்கை விவசாயிகளை இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்து செயல் படுத்திக் கொண்டு இருக்கும் விவசாயிகளின் நலனிலும் நுகர்வோர்கள் நலனிலும் அக்கறை கொண்ட நிறுவனம். இந்த சி.எஸ்.ஆர் வெண 2022 மாநாடு (CORPORATE SOCIAL RESPONSIBILITY) இந்திய நாட்டிற்கே பெருமை சேர்க்கும் விதமாக முதன் முறையாக சென்னையில் ஜீலை மாதம் பத்தொன்பது தேதி 2022 ம் ஆண்டு ( 19-7- 2022) சென்னையில் உள்ள  கலைவாணர் அரங்கத்தில் (KALAIVANAR ARANGAM ,TRIPLICANE)மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெறவிருக்கிறது. இதில் 350 பண்ணாட்டு நிறுவனங்கள், 350 தன்னார்வுத்தொண்டு நிறுவனங்கள்,  100 க்கு மேற்பட்ட முன்னோடி விவசாயிகள், 100 க்கு மேற்பட்ட தரமான அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் போது 10 முதல் 12 தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு ஃப்ரபஞ்ச வனத்திட்டம் மற்றும் வேளாண் மருத்துவ மனைக்கு நிதி வழங்கப்படுகிறது.

 அகத்தியர் சூத்திரம் பிரகாரம் மக்கள் மற்றும் ஒரு நாடு செழிப்புடன் இருக்க மிக முக்கியமான முக்கோணம் ஒருங்கிணைந்த விவசாயம், ஒருங்கிணைந்த மருத்துவம் , ஆரோக்கியம் பேணுதல், சுற்றுப்புற சூழல் பேணி காத்தல் , இது அறம் சார்ந்த ஆட்சியை நடத்தும் மன்னர்களுக்கு அவசியம். இந்த விசயங்கள் கடந்த 260 ஆண்டுகள் வழி மாறியது, நெறிமுறை தவறியது தற்போது மனித இனம் வாழ்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது. அது மட்டுமல்ல அடுத்த 20 ஆண்டுகள் சவால் மிக்க சகாப்தமாக இருக்கும் என மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும், விஞ்ஞானிகளும், ஞானிகளும் துல்லியமாக கணித்துள்ளார்கள்.இதை சரி செய்வதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள், தன்னார்வு தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள்,  விவசாயிகள், நுகர்வோர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள், இளைய சமுதாயம் ஒன்று சேர்ந்து அடுத்த 20 ஆண்டுகளில் மேற்கொள்ளவேண்டிய சிறப்பான முறையில் நாட்டிற்கும், மக்களுக்கும் பயனுள்ள திட்டங்களை வடிவைமைத்து செயல்படுத்திடும் தருணத்தில் இருக்கிறோம். அதன் படி கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு பகிர்வு நிதியுதவி மூலம் உலகில் ஏற்படும் புவியியல் மாற்றங்கள், பஞ்சபூத சீற்றங்கள், வளம் குன்றா வேளாண்மையின் மூலம் நஞ்சில்லா உணவு கிடைத்திட, சுற்றுப்புற சூழலை காத்திட, பொது சொத்துக்களை பேணிக்காக்க, நோய் நொடியில் லா ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க, சிறந்த தொழில் நுட்பங்கள், எந்திரமையம் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு அழைப்பு விடுப்பது மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியமான 12 துறைகளுக்கும் நிதி உதவி அளிப்பது போன்றவை இந்த மாநாட்டில் முக்கிய அம்சங்களாக இடம் பெறுகிறது.

விவசாயம், சுற்றுப்புற சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து சி.எஸ்.ஆர் திட்டம் எனப்படும் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலமாக முன்னெடுக்க இந்த மாநாடு வழி வகை செய்யும். இந்த வெமா 2022 மாநாட்டிற்கு விளம்பரதாரர்கள், வியாபாரிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாநாட்டில் ஐந்து விசயங்களை உள்ளடக்கி விளக்க உரை அளிக்கப்படும்.

1. Triangle of success

2. Triangle of continued services

3. Triangle of self sustained village economy

4. Triangle of Ancient value systems

5. Triangle of carbon sequestration and corporate social responsibility including carbon trading and corporate responsibility.

இத்துடன் கடந்த 5000 ஆண்டுகளில் இருந்து வந்த இந்தியாவின் பாரம்பரியங்கள், எப்படி அழிந்தது, அதன் அழிவுப் பாதைகள், எப்படி மீட்டு எடுக்க வேண்டும், கால்நடைகளை அழித்த வரலாறு, பயனற்ற கல்வியறிவு ( மெக்காலே ) என்பதை இந்த மாநாடு வழியுறுத்தப்படும்

  உலகின் தலைசிறந்த பொருளாதாரம் இந்திய என்ற கருத்துக்கள் ஆதாரங்களுடன் சிறப்பு மிக்க குறிப்புகள் பகிரப்படும்.

5000 ஆண்டுகளில் இருந்து பின் நம் மக்கள், ஆட்சியாளர்கள்