என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது அவரவர் விருப்பம்

என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது அவரவர்  விருப்பம்
India bans sale of cows for Slaughter Thirunavukarasu condemns

சென்னை: இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது, இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:

தற்போது மத்தியில் ஆளும் அரசு மக்கள் நலனை செயல்படுத்தாத அரசாகவும், பிரச்சினைகளை கண்டு கொள்ளாத அரசாகவும் உள்ளது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. ஆனால் மோடி இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதற்கு தடை விதித்துள்ளார். இதுவா இப்போது முக்கியம். யார் என்ன சாப்பிட வேண்டும். எப்போது சாப்பிட வேண்டும். எதை சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் மோடியும் அமித்ஷாவுமா முடிவு செய்வது? என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

India bans sale of cows for Slaughter Thirunavukarasu condemns