இந்தியா 5 விக்கெட்டுக்கு 54 ரன்கள்

இந்தியா 5 விக்கெட்டுக்கு 54 ரன்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது, இதில் முதல் இன்னிங்சில், ஆடிய இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது, இதை பின்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் வேகமாக பெவிலியன் திரும்பினர், விஹாரி (13), புஜாரா (0), கோலி (0), ரகானே (1), ரோகித் சர்மா (5) என சொற்ப ரன்களை குவித்து அனைவரும் வேகமாக நடையைக்கட்டினர். 

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில், 5 விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்து 346 ரன்கள் முன்னிலையில் உள்ளது.