முக்கிய திருப்பங்கள் - விறுவிறுப்பாக நகரும் “தெய்வமகள்”

கலைஞர் தொலைக்காட்சியில் ஒருமணிநேரம் ஒளிபரப்பாகி வரும் “தெய்வமகள்” நெடுந்தொடருக்கு குடும்பங்களிடையே ஏகோபத்திய வரவேற்பு கிடைத்து வருகிறது.

பல்வேறு முக்கிய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த நெடுந்தொடரில், நாயகியான சத்யா, திருமணம் செய்து கொள்ளாமல் வாழ நினைக்கிறார்.

இதையடுத்து, சத்யாவின் தங்கைக்கும், பிரகாஷூக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர். ஆனால், பிரகாஷின் அண்ணியார் இந்த திருமணத்தை நிறுத்த திட்டம் தீட்டுகிறார். அவரது சதி வலையில் சிக்கிக் கொள்ளும் மணப்பெண், மண்டபத்தில் இருந்து ஓடிவிடுகிறார்.

இப்படி, சத்யாவின் தங்கை ஓடிப்போக, திருமணம் பாதியில் நிற்கிறது. பின்னர், தனது தாயின் வற்புறுத்தலின் பேரில் பிரகாஷை திருமணம் செய்து கொள்கிறார் சத்யா. தற்போது புகுந்த வீட்டிற்கு சென்றுள்ள சத்யாவுக்கும், பிரகாஷின் அண்ணியாருக்கும் இடையே பனிப்போர் துவங்கியிருக்கிறது. விரைவில் அது தீவிரமாகி தொடரின் விறுவிறுப்பு இன்னும் கூடும் என்பதில் சந்தேகமில்லை.

100 எபிசோடுகளை நெருங்கியிருக்கும் இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரமான சத்யாவாக (வாணி போஜனும்), பிரகாஷாக (கிருஷ்ணாவும்), அண்ணியார் காயத்ரியாக (ரேகா கிருஷ்ணப்பாவும்) நடித்துள்ளனர்.

கலைஞர் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நெடுந்தொடரை ச.குமரன் இயக்கியிருக்கிறார்.