துரைமுருகனின் வீடு, கல்லூரியில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை

துரைமுருகனின் வீடு, கல்லூரியில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை

வேலூர்: தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரி துறையினர் இன்று அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான பள்ளி,  கல்லூரியிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகிறார்கள்.

துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.