கீதாலட்சுமியின் பதில்: வருமான வரித்துறையினர் அதிருப்தி

சென்னை: எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலக்ஷ்மியின் வீட்டில் வருமானத்துறை அதிகாரிகள் கடந்த 7-ந் தேதி அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அப்போது அவர் வீட்டில் நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் அளிக்க நேரில் ஆஜராகும் படி கீதாலக்ஷ்மிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதை ஏற்று கீதாலட்சுமி நேற்று ஆஜர் ஆனார். அவரிடம் வருமான வரித்துறையினர் பல்வேறு கேள்விகளை கேட்டனர். ஆனால் கீதாலட்சுமி பெரும்பாலான கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க வில்லை.
இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். எனவே கீதாலட்சுமியை மீண்டும் விசாரணைக்கு அழைக்க ஐ.டி. உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான சம்மன் கீதாலட்சுமிக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது.