சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவும் ஐசிஐசிஐ லம்பார்டு

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவும் ஐசிஐசிஐ லம்பார்டு
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவும் ஐசிஐசிஐ லம்பார்டு

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவும் ஐசிஐசிஐ லம்பார்டு

மும்பை, நவம்பர் 09, 2021: சென்னை மாநகரில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் போக்குவரத்து பாதிப்புடன் தொழில், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட வீடுகள் மற்றும் பிற சொத்துகளுக்கு பரவலான இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் தனியார் துறையில் இந்தியாவின் முன்னணி பொது காப்பீடு நிறுவனமான ஐசிஐசிஐ லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ், சென்னையில் மழையால் சேதமடைந்த பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க தன்முனைப்போடு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் சிரமங்களைத் தணிப்பதற்காகவும் மற்றும் க்ளைம்களுக்கான சேவையை (இழப்பீடுகளுக்கான உரிமைக்கோரிக்கை) சிரமமற்ற, எளிதான வழிமுறையில் வழங்குவதற்காகவும் எஸ்எம்எஸ் முன்னெச்சரிக்கை செய்திகளை இந்நிறுவனம் அனுப்பத் தொடங்கியிருக்கிறது. பேரிடருக்குப் பிந்தைய ஒரு நடவடிக்கையாக தனது பல்வேறு கிளைகளிலும், க்ளைம்களுக்கு அதிவேகமாக தீர்வு காண்பதற்கான பிரத்யேக அதிகாரிகளை இந்நிறுவனம் பணியில் ஈடுபடுத்தும் மற்றும் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு முன்னுரிமையுடன் சர்வீஸ் வழங்குவதற்கு தனது பார்ட்னர் கேரேஜ்களுக்கும் ஐசிஐசிஐ லம்பார்டு அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது. 


தொடர்ந்து விடாமல் மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகள் மழைநீர் வெள்ளத்தால் மூழ்கியிருக்கின்றன.  இயல்புநிலையும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு துயர நிகழ்வை இது நினைவுபடுத்துகிறது.  விடாது பெய்யும் மழை, மாநகரின் பொது மற்றும் தனியார் வாகனப் போக்குவரத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. வாகனங்களுக்கு இழப்பீட்டு கோரல் செயல்முறையை துரிதமாக்குவதற்காக, வெள்ளப்பாதிப்பினால் வரக்கூடிய க்ளைம்களின் எண்ணிக்கை அடிப்படையில் சென்னையிலுள்ள அதன் கிளைகளில் “அதிவேக க்ளைம் செட்டில்மென்ட்” டெஸ்க்குகளை இக்காப்பீட்டு நிறுவனம் நிறுவவிருக்கிறது.  தனது மோட்டார் பாலிசிதாரர்களுக்கு விரைவாகவும் மற்றும் உரிய நேரத்திலும் க்ளைம்கள் மீது இழப்பீட்டை வழங்குவதற்கு சாத்தியமுள்ள அனைத்து ஆதரவையும் கிடைக்குமாறு செய்வதே இதன் முக்கிய குறிக்கோளாகும். 


ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மோட்டார் பாலிசிதார்களுக்கு எஸ்எம்எஸ் முன்னெச்சரிக்கை செய்திகளை அனுப்புவதை இந்நிறுவனம் ஏற்கனவே தொடங்கியிருக்கிறது.  மழைநீர் வெள்ளத்தில் மூழ்கியதால் மற்றும் நீர் புகுந்ததால் வாகன சேதம் ஏற்பட்டிருக்குமானால், 18002666 என்ற கட்டணமில்லா இலவச எண்ணை அழைக்குமாறு இந்த அறிவுறுத்தல் குறுஞ்செய்தி கேட்டுக்கொள்கிறது. கூடுதலாக, இன்ஜின் இயக்கத்திறனிழப்பு (Seizure) பொதுவான பிரச்சனைகளுள் ஒன்றாக இருப்பதால், வாகனத்திற்குள் அல்லது இன்ஜினுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டால் அந்த மோட்டார் வாகனத்தை இயக்கத் தொடங்குவதை தவிர்க்குமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக்கொள்கின்ற எஸ்எம்எஸ் செய்திகளையும் இந்நிறுவனம் அனுப்பியிருக்கிறது.  அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேரம் தொடர் ஆதரவை வழங்கும் செயல்பாட்டின் ஒரு வழிமுறையாக இதனை விரைவுபடுத்தும் விதத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு தனது பார்ட்னர் கேரேஜ்களுக்கு இக்காப்பீட்டு நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது. மழை வெள்ளத்தினால் இழப்புகள் ஏற்பட்டிருக்குமானால், அது தொடர்பான க்ளைம்களுக்கு தீர்வு காண்பதற்கு  தொடர்புகொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் தனது அனைத்து பாலிசிதாரர்களுக்கும் இந்நிறுவனம் தகவலளித்திருக்கிறது.


க்ளைம்களை உடனடியாக தாக்கல் செய்வதற்காக IL டேக் கேர் செயலியைப் பயன்படுத்தி, டிஜிட்டல் தீர்வுகளின் ஆதாயத்தை பெறுமாறு அனைத்து வாடிக்கையாளர்களையும் ஐசிஐசிஐ லம்பார்டு ஊக்குவிக்கிறது.  இதற்கு மாற்று வழிமுறையாக, எந்தவொரு உதவியைப் பெறவும் 18002666 என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணை வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்ளலாம். 

ICICI Lombard General Insurance Company Ltd.

We are one of the leading private sector non-life insurers in India. We offer our customers a comprehensive and well-diversified range of products, including motor, health, crop, fire, personal accident, marine, engineering and liability insurance, through multiple distribution channels. More details are available atwww.icicilombard.com.