எனக்கு வாக்களிக்காவிட்டால், சாபம் இடுவேன்: பா.ஜ.க வேட்பாளர்

எனக்கு வாக்களிக்காவிட்டால், சாபம் இடுவேன்: பா.ஜ.க வேட்பாளர்

உன்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சாக்‌ஷி மகராஜ் " எனக்கு வாக்களிக்காவிட்டால், சாபம் இடுவேன்" என்று கூறியுள்ளார், மேலும் நான் ஒரு துறவி, துறவி ஒன்றை கேட்டு அது கிடைக்கவில்லையென்றால், உங்களிடம் உள்ள அனைத்து நல்லவைகளை எடுத்துக்கொண்டு பாவங்களை திருப்பி தருவார் என்று நமது சாஸ்திரங்களில் உள்ளது.

நான் உங்கள் சொத்துக்களை கேட்கவில்லை. 125 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் வாக்குகளை தான் கேட்கிறேன்” என்று பேசியுள்ளார், அவரின் பேச்சுக்கு வாக்காளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.