நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை: கருணாஸ்

நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை: கருணாஸ்
I did not get money from anybody Karunaas

சென்னை: நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கூவத்தூரில் நான் எனது நண்பரின் விடுதியில் தான் இருந்தேன். ஏதாவது கூட்டம் என்றால் தான் அவர்களோடு கலந்துகொண்டேன். அமைச்சர்களிடம் எனது தொகுதிக்கு நிதி ஒதுக்குங்கள், கண்மாய் தூர்வாரப்பட வேண்டும், அதற்கு கூடுதலாக நிதி தாருங்கள், எனது தொகுதியில் மிக முக்கியமான பிரச்சினை தண்ணீர் தான், அனைவருக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்க உதவுங்கள் என்று கேட்டிருக்கிறேன்.

தவிர, எனது தேவைக்காகவோ, எனது அமைப்பினரின் தேவைக்காகவோ நான் பணம் கேட்டதும் இல்லை, வாங்கியதும் இல்லை.

நான் அணி தாவவில்லை. அந்த எண்ணம் இல்லாதவனாகவே இதுவரையில் இருக்கிறேன். அப்படி இருக்க அபாண்டமான பொய்யை இன்று தமிழகத்தில் விவாத பொருளாக ஆக்கி இருக்கிறார், சரவணன்.

எனது விசுவாசத்திற்கும், எனது நேர்மைக்கும், எனது நன்றி உணர்வுக்கும் எதிரான ஒரு அப்பட்டமான பொய்யை வெளியிட்டிருக்கும் சரவணன் எம்.எல்.ஏ. மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன். காவல்துறையிடமும் இதுகுறித்து முறையிடுவேன். நான் அம்மாவின் விசுவாசி. இந்தநிலையில் இருந்து என்றும் மாறமாட்டேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

I did not get money from anybody Karunaas