சென்னை: மனைவியை கொலை செய்த குருக்கள்

சென்னை: மனைவியை கொலை செய்த குருக்கள்
Husband murder his own wife and set drama in Vadapalani

சென்னை: கடந்த வாரம் சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகணேஷ் (27). வடபழனி சிவன் கோயில் குருக்களாக வேலை செய்து வரும் இவர், மனைவி ஞானபிரியா (24) உடன் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை வழக்கம் போல் பாலகணேஷ் கோவிலில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இரவு கணவன் மனைவி இருவரும் உணவு அருந்திவிட்டு தூங்கி விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி கழிவறைக்கு செல்ல வந்த போது, பாலகணேஷ் கை கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் கழிவறையில் கிடந்தார்.

உடனே பாலகணேஷ் மனைவி ஞானபிரியாவுக்கு தகவல் தெரிவிக்க வந்த போது வீட்டின் படுக்கை அறையில் ரத்த வெள்ளத்தில் ஞானபிரியாவும் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து விஜயலட்சமி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்படி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் ஆய்வு செய்தனர். காயமடைந்த பாலகணேஷை மீட்டு சிகிச்சைக்காக போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. பெண் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கணவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிப்பதால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதனை அடுத்து நண்பரின் உதவியுடன் மனைவி ஞானப்பிரியாவை கொலை செய்துவிட்டு குருக்கள் பாலகணேஷ் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. மனைவி ஞானப்பிரியாவை சுத்தியால் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Husband murder his own wife and set drama in Vadapalani