சென்னை சில்க்ஸில் திடீர் தீ விபத்து

சென்னை சில்க்ஸில் திடீர் தீ விபத்து
Huge fire in Chennai Silks Showroom in Chennai

சென்னை: சென்னை தி.நகர், உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்குள்ளான துணிக்கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்த ஊழியர்கள் 11 பேரை தீ அணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

பற்றி எரியும் தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். ஆனால் ஐந்து மணி நேரமாக போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. எனவே உஸ்மான் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து, மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Huge fire in Chennai Silks Showroom in Chennai