வளர்ப்பு நாய் மீது கல் வீசியவரை கொன்ற உரிமையாளர்

வளர்ப்பு நாய் மீது கல் வீசியவரை கொன்ற உரிமையாளர்

டெல்லியில் தொழில்சாலை ஒன்றில் தையல்காரராக இருந்து வந்தவர் ஆஃபாக் (30), இவர் மெஹ்தப் என்பவர் வீட்டின் வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது மெஹ்தப்பின் வீட்டில் வளர்ந்து வந்த நாய் இவரை நோக்கி குறைத்தது, அதனால் பயந்துபோன ஆஃபாக் அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து நாய் மீது வீசியுள்ளார். இதனை கவனித்த மெஹ்தப் அவரிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளார், இதில் ஆத்திரமுற்ற மெஹ்தப் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஆஃபாக்கை சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஆஃபாக் உயிரிழந்து விட்டார்.

போலீசார் மெஹ்தப்பை கைது செய்தனர், போலீசார் விசாரணை நடத்தியதில் குடிபோதையில் இருந்தேன் என மெஹ்தப் தெரிவித்துள்ளார்.