நீட் தேர்வு கட்டுப்பாடு: பெற்றோர்கள் அதிருப்தி

நீட் தேர்வு கட்டுப்பாடு: பெற்றோர்கள் அதிருப்தி
High restriction on NEET exam makes parents angry

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர "நீட்" தேர்வு நேற்று நாடு முழுவதும் 103 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 8 நகரங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.

நீட் தேர்வினை எழுதவந்த மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் தேர்வு எழுதவந்த மாணவர்களையும், அவர்களுடைய பெற்றோர்களையும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் கைச்சட்டைப் பகுதிகள் பாதியாக கிழிக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் அணிந்துவந்த ஷூ, பெல்ட், கைக் கடிகாரம், செயின், மோதிரம், துப்பட்டா, பேனா, பென்சில், ரப்பர், தொப்பி, கைப்பை, தோள்பை, புடவை, வளையல்கள், பர்தா, பைஜாமா, குர்தா, டி-சர்ட், பெல்ட் உள்ளிட்ட அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. தேர்வறைக்கு ஓரிரு நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர்களை தேர்வறைக்குள் அனுமதிக்கப்படாததால் இது அனைத்து மாணவர்களிடமும் விரக்தியை ஏற்படுத்தியது.

மேலும், நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுடன் நடைபெற்ற இந்த "நீட்" தேர்வில் கோவா மாநிலத்தில் ஆள்மாறாட்டம் செய்த காரணத்தினால் பிகாரை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

High restriction on NEET exam makes parents angry