எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்

எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்
HIV AIDS can be cured Temple university scientists

வாஷிங்டன்: எய்ட்ஸ் நோயின் பாதிப்பினால் இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர், இந்த நோயை குணப்படுத்த இது வரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை, எய்ட்ஸ் நோயை குணப்படுத்த உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் அதற்கான பலன் இது வரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகம் மற்றும் பீட்டர் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். தற்போது எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தும் சிகிச்சை முறையை அவர்கள் கண்டு பிடித்துள்ளதாக கூறியுள்ளனர்.

எலியின் உடலில் எய்ட்ஸ் கிருமியை செலுத்தி அதை குணப்படுத்தும் வகையில் சிகிச்சையை மேற்கொண்ட விஞ்ஞானிகள், மனிதனின் மரபணுவில் சில மாற்றங்களை கொண்டு அந்த அணுவை எலியின் உடலில் செலுத்தி எலியின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். அப்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி எலி உடலில் இருந்த எய்ட்ஸ் கிருமிகளை அவை முற்றிலும் அழித்து விட்டன.

மனிதனின் உடலில் புகும் எய்ட்ஸ் கிருமிகள் முதலில் எச்.ஐ.வி. கிருமியாக இருந்து பின்னர் அவை வளர்ந்து எய்ட்ஸ் நோயை உருவாக்குகின்றன. இந்த மரபணு சிகிச்சை மூலம் எச்.ஐ.வி. கிருமி உடலில் வளரும் போதே அவற்றை அழித்து விடலாம் எனவே எய்ட்ஸ் நோய் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விரைவில் இந்த சிகிச்சை முறையை மனிதனிடமும் நடத்தி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளனர்.

HIV AIDS can be cured Temple university scientists